காலியான இருக்கைகளோடு காணப்பட்ட IND-PAK போட்டி? ரசிகர்கள் அதிருப்தி! என்ன காரணம்?

ஒரு போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது என்றாலே டிக்கெட் விற்பனையானது சில நிமிடங்களில் விற்றுத்தீர்த்துவிடும். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் மோதிய நேற்றைய போட்டியில் காலியான இருக்கைகளே வீரர்களை வரவேற்றன.
Ind - Pak
Ind - PakTwitter

கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா-பாகிஸ்தான் மோதலை காணுவதற்கான ரசிகர்கள் உலகளவில் அதிகமாக இருக்கின்றனர். ஏனென்றால் வரலாற்றில் இவ்விரு அணிகளும் பல சுவாரசியமான மோதல்களை கண்டுள்ளன. இரண்டு அணிகளும் அவர்களது நாடுகளுக்கு இடையேயான அரசியல் விவகாரங்களால் உலகக்கோப்பை மற்றும் ஆசியக்கோப்பை தொடர்களில் மட்டுமே மோதிவருகின்றனர். இதனால் இவ்விரு அணிகளும் மோதும் போட்டி என்றாலே ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு எழுந்துவிடும். இதனால் இந்தியா-பாகிஸ்தான் மோதுகிறது என்றாலே விளையாட்டு மைதானம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அன்றைய போட்டி ரசிகர்களால் நிரம்பி வழியும்.

Ind - Pak
Ind - Pak

அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பை வைத்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியானது வெற்று இருக்கைகளோடு காணப்பட்டது இதுவே முதன்முறையாகும். நேற்று நடைபெற்ற ஆசியக்கோப்பை சூப்பர் 4 போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. இதனைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள் போட்டி ஏற்பாட்டாளரான பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை விமர்சித்து வருகின்றனர்.

40 மடங்கு உயர்த்தப்பட்ட டிக்கெட் விலை! ஒரு டிக்கெட் விலை இவ்வளவா?

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் ஒரு சர்வதேச ஒருநாள் போட்டியின் டிக்கெட்டின் விலை ரூ.250ஆக இருந்துள்ளது. ஆனால் தற்போது நடைபெற்றுவரும் ஆசியக்கோப்பையின் டிக்கெட் விலைகளை தொடரை நடத்திவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகமே நிர்ணயித்துள்ளது. நடப்பு ஆசியக்கோப்பையின் லீக் போட்டிகளில் விற்கப்பட்ட டிக்கெட் விலையை விட சூப்பர் 4 போட்டிகளுக்கு 40 மடங்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது சூப்பர் 4 போட்டியின் ஒரு டிக்கெட்டின் விலை 10ஆயிரமாக விற்கப்படுகிறது.

Gill - Rohit
Gill - Rohit

கொழும்புவில் சனிக்கிழமையன்று நடந்த இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதிய சூப்பர் 4 போட்டிக்கு, 35,000 பேர் கொண்ட பிரேமதாச மைதானத்தில் 7,000 ரசிகர்கள் மட்டுமே வந்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடந்திருக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் வெறும் 10ஆயிரம் ரசிகர்களே இடம்பெற்றுள்ளனர். டிக்கெட் விலையின் இமாலய உயர்வால் ரசிர்கள் கூட்டம் விலகியுள்ளது.

நாங்கள் கிரிக்கெட்டை விரும்புகிறோம், அதற்காக இவ்வளவு பணமா?

டிக்கெட் விலை குறித்து பேசியிருக்கும் ரசிகர்கள் பலர், “இது நல்லதல்ல. நாங்கள் கிரிக்கெட்டை விரும்புகிறோம். ஆனால் அதற்காக ஒரு போட்டிக்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமா” என்றும், இதே மைதானத்தில் நான் 200 ரூபாய்க்கு போட்டியை பார்த்திருக்கிறேன். தற்போது அந்த சத்தத்தை கேட்க முடியாமல் டிவியில் பாருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் லக்னோவிலிருந்து புறப்பட்டு வந்த ரசிகர் ஒருவர் கூறும் போது, “இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதலை பார்ப்பதற்காக நாங்கள் 16,000 இலங்கை ரூபாய் செலுத்தினோம். நாங்கள் கண்டியிலும் இருந்தோம், அங்கு 15,000 செலுத்த வேண்டியிருந்தது. இது கடந்த முறை நாங்கள் வந்ததை விட மிக அதிகமாக உள்ளது” என்று AFP இடம் கூறியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ரசிகர்கள். “இதுபோன்ற ஒரு இந்தியா-பாகிஸ்தான் போட்டியை பார்த்ததே இல்லை. மிகவும் மோசமான ஒரு மேனேஜ்மெண்ட்” என்று விமர்சித்து வருகின்றனர்.

95 சதவீதம் டிக்கெட் விலையை குறைத்த இலங்கை கிரிக்கெட்!

இந்தியா பாகிஸ்தான் போன்ற பெரிய மோதலையே ரசிகர்கள் காண வராததால் இலங்கை கிரிக்கெட் வாரியம், டிக்கெட் விலையை குறைத்துள்ளது.

ரசிகர்களை மீண்டும் மைதானத்திற்கு வரவழைக்கும் முயற்சியாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அனைத்து சூப்பர் 4 போட்டிகளுக்கும் 95 சதவீதம் வரை விலைக் குறைப்பை அறிவித்துள்ளது. தற்போது டிக்கெட்டுகளின் விலை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com