மேடம் இது FAKE மேடம்! அயோத்தியில் விராட் கோலி என நினைத்து வேறொரு நபரை சுற்றிவளைத்த ரசிகர்கள்!

அயோத்தியில் விராட் கோலியை பார்த்துவிட்டு செல்ஃபிக்காக ரசிகர்கள் சுற்றிவளைத்த நிலையில், அது விராட் கோலியை போன்ற வேறுநபர் என தெரியவந்துள்ளது.
Duplicate virat kohli
Duplicate virat kohliX

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி, அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்றாரா இல்லையா என்ற குழப்பம் காலையிலிருந்து நீடித்துவந்தது. விராட் கோலியின் தீவிர ரசிகர் ஒருவர், “ஹைத்ராபாத்தில் பிராக்டிஸ் செஸ்ஸனை முடித்துவிட்டு கோலி அயோத்திக்கு வந்துவிட்டார்” என பதிவிட்ட எக்ஸ் பதிவு சிறிது நேரத்தில் வைரலாக பரவியது. ஆனால் சிறிது நேரத்தில் அவரே “எனக்கே விராட் கோலி வந்தாரா என சரியாக தெரியவில்லை” என பதிவிட்டார்.

அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ஏன் விராட் கோலி பங்கேற்கவில்லை என்ற விமர்சனமும், கோலி ஹைதராபாத்திலும் இல்லை அயோத்தியிலும் இல்லை எங்கே சென்றுவிட்டார் என்ற கேள்வியும் எழுந்த நிலையில், “விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்றும், அதற்கான காரணத்தை ரசிகர்களும், ஊடகங்களும் ஊகிக்க வேண்டாம்” எனவும் பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் தான் தற்போது விராட் கோலியை போன்ற வேறொரு நபர் அயோத்திக்கு சென்றிருந்த நிலையில், ரசிகர்கள் அவரை உண்மையான கோலி என்று சூழ்ந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

அயோத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஃபேக் விராட் கோலி!

எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில், விராட் கோலியை போன்ற உருவமுள்ள ஒருவர் இந்திய ஜெர்சியை அணிந்து பின்பக்கம் விராட் கோலி 18 என்ற நம்பரையும் அணிந்துள்ளார். அவரை பார்த்து உண்மையான கோலி தான் என நினைத்த ரசிகர்கள் செல்ஃபிக்காக அவரை சூழ்ந்துகொண்டு பின்னாடியே துறத்தினர். பின்னர் அவர் உண்மையான கோலி இல்லை என்று சொன்னபோதும், அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. ஜனவரி 25ம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியிலும், அதற்கு அடுத்த இரண்டாவது போட்டியிலும் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

virat kohli
virat kohli

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 2000 டெஸ்ட் ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக 4000 மொத்த ரன்கள், 1000 பவுண்டரிகள் போன்ற 6 சாதனைகளை விராட் கோலி முறியடிக்கவுள்ள நிலையில், ரசிகர்களின் காத்திருப்பு இன்னும் 15 நாட்களுக்கு தள்ளிச்சென்றுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com