குடிபோதையில் சுற்றிய பென் டக்கெட்
குடிபோதையில் சுற்றிய பென் டக்கெட்web

குடிபோதையில் வழி தெரியாமல் சுற்றிய இங்கிலாந்து வீரர்.. நடத்தையை நியாப்படுத்திய மைக்கேல் வாகன்!

இங்கிலாந்து வீரர்கள் நூசா கடற்கரையில் அளவுக்கு அதிகமாக குடித்ததாக விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில், தற்போது பென் டக்கெட் குடிபோதையில் வழிதெரியாமல் சுற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on
Summary

ஆஸ்திரேலியாவில் இங்கிலாந்து அணியின் தோல்வி தொடரும் நிலையில், குடிபோதையில் சுற்றிய பென் டக்கெட் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மைக்கேல் வாகன், விடுமுறை நாட்களில் குடிப்பது குற்றமல்ல என கூறியுள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தவுள்ளது.

’சோத்தாலையும் அடிவாங்கியாச்சு.. சேத்தாலையும் அடிவாங்கியாச்சு’ என்பது போல இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு, இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மோசமானதாக மாறியிருக்கிறது. 11 நாட்களில் 0-3 என மூன்று டெஸ்ட் போட்டிகளில் தோற்று தொடரையே இழந்துள்ள இங்கிலாந்து அணிமீது, போதை, குடிப்பழக்கம் சார்ந்து நடத்தை மீது வைக்கப்பட்டுள்ள விமர்சனம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் சுற்றிய பென் டக்கெட்
ரவி சாஸ்திரியை இங்கிலாந்து COACH ஆக்குங்க.. ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதான் வழி! - முன்னாள் ENG வீரர்

குடிப்போதையில் சுற்றிய பென் டக்கெட்..

பிரிஸ்பேனில் நடந்துமுடிந்த 2வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு நுசா கடற்கரைக்கு பயணம் செய்த இங்கிலாந்து அணி, அங்கு மதுப்பார்ட்டியில் ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட 4 நாட்கள் மதுபோதையில் இங்கிலாந்து வீரர்கள் சுற்றியதாக சொல்லப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.

இந்தசூழலில் தான் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட், அளவுக்கதிகமாக குடித்துவிட்டு இருப்பிடம் செல்ல வழிதெரியாமல் சுற்றும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தசூழலில் இவ்விவகாரம் குறித்து பேசியிருக்கும் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், “விடுமுறை நாட்களில் டிரிங் செய்த வீரர்களை நான் குற்றஞ்சாட்டப்போவதில்லை. நான் இங்கிலாந்து அணிக்காக விளையாடியபோதும் இப்படி செய்துள்ளேன், ஆனால் நான் எந்த நேரத்திற்கு வீட்டிற்கு போகவேண்டும் என்பது எனக்கு தெரியும். அதை பென் டக்கெட் கற்றுக்கொள்ள வேண்டும்.

நாம் பார்த்த ஆதாரங்களின் அடிப்படையில் டக்கெட்டை கண்டிக்கக் கூடாது, மற்ற இங்கிலாந்து வீரர்களையும் கண்டிக்கக் கூடாது, ஏனென்றால் எல்லா அணியிலும் பரவலாக இருக்கும் பிரச்சினை இது. இந்தப் பழக்கத்தை கிரிக்கெட் விளையாட்டு தான் உருவாக்கியுள்ளது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அனைத்திலும் இந்த கலாச்சாரம் இருக்கிறது” என்று பேசியுள்ளார். இவருடைய பேச்சும் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

பென் டக்கெட்
பென் டக்கெட்

பென் டக்கெட் ஏற்கனவே இங்கிலாந்து லயன்ஸ் அணிக்காக ஆஷஸ் தொடரில் விளையாடியபோது, பெர்த்தில் உள்ள அவென்யூ பாரில் மூத்தவீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது மதுபானத்தை ஊற்றியதால் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது விசாரணையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது அவரின் எதிர்கால கிரிக்கெட்டுக்கு ஆபத்தாக முடியும் நிலை உருவாகியுள்ளது.

குடிபோதையில் சுற்றிய பென் டக்கெட்
இனியும் பாஸ்பால் அவசியமா..? 16வது வருடமாக ENG தோல்வி.. ஆஷஸ் தொடரை வென்றது ஆஸ்திரேலியா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com