இந்தியாவுக்கு செக்! பக்கா பிளான் உடன் களமிறங்கும் இங்கிலாந்து! 3 ஸ்பின்னர்கள் கொண்ட அணி அறிவிப்பு!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணி
இங்கிலாந்து டெஸ்ட் அணிweb

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தொடர் என்பதால், அனைத்து தரப்பினரின் கவனத்தையும் இந்தத்தொடர் பெற்றுள்ளது. ஜனவரி 25ம் தேதி (நாளை) முதல் தொடங்கி மார்ச் 11-ம் தேதிவரை நடக்கவிருக்கும் போட்டிகளானது ஹைதராபாத், ராஜ்கோட், விசாகப்பட்டினம், ராஞ்சி மற்றும் தரம்சாலா மைதானங்களில் நடத்தப்படவிருக்கிறது.

முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் 4 குவாலிட்டி ஸ்பின்னர்களை இந்திய அணி அறிவித்துள்ளதால், ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்து வீரர்கள் என்ன செய்யப்போகிறார்கள், அந்த அணியின் பாஸ்பால் அணுகுமுறை எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகினது.

இந்நிலையில்தான், இந்தியாவின் பேட்ஸ்மேன்களுக்கு கவுன்ட்டர் அட்டாக் கொடுக்கும் வகையில், இங்கிலாந்து அணியும் 3 ஸ்பின்னர்கள் அடங்கிய முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை அறிவித்துள்ளது.

ரெஹான் அகமது, டாம் ஹார்ட்லி, ஜாக் லீச்! 3 ஸ்பின்னர்களுக்கு இடம்!

ஹைத்ராபாத்தில் நாளை தொடங்கவிருக்கும் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது. அதில் 3 ஸ்பின்னர்கள் இடம்பெற்றிருப்பதால் மூத்த வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது. ஹைத்ராபாத் மைதானம் ஸ்பின்னுக்கு சாதகமான ஆடுகளம் என்பதால், இந்த முடிவுக்கு இங்கிலாந்து அணி சென்றுள்ளது.

Tom Hartley
Tom Hartley

நேற்று ஹைத்ராபாத்தில் பயிற்சிக்கு பிறகு ஒரேயொரு வேகப்பந்துவீச்சாளர் குறித்து பேசியிருந்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “நீங்கள் ஒரு வேகப்பந்துவீச்சாளருடன் செல்லவேண்டும் என நினைத்தால், உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேகப்பந்துவீச்சாளர் தேவைப்படுவார். அந்தவகையில் மார்க் வுட் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பந்துவீச்சாளர், அவர் 90 கிமீ வேகத்தில் வீசும் ரிவர்ஸ் சிங் எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” என தெரிவித்திருந்தார். இதனடிப்படையில் இங்கிலாந்து அணி க்ளியர் பிளானுடன் களமிறங்கவிருப்பது தெரிகிறது.

Rehan Ahmed
Rehan Ahmed

முதல் டெஸ்ட்டுக்கான இங்கிலாந்து 11 வீரர்கள்: 1. சாக் கிராலி, 2. பென் டக்கெட், 3. ஒல்லி போப், 4. ஜோ ரூட், 5. ஜானி பேர்ஸ்டோ, 6. பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), 7. பென் ஃபோக்ஸ், 8. ரெஹான் அகமது (ஸ்பின்னர்), 9. டாம் ஹார்ட்லி (ஸ்பின்னர்), 10. மார்க் வூட், 11. ஜாக் லீச் (ஸ்பின்னர்)

இங்கிலாந்து டெஸ்ட் அணி
இங்கிலாந்திடம் “பாஸ்பால்” இருந்தால்.. இந்தியாவிடம் “விராட்பால்” இருக்கிறது! - சுனில் கவாஸ்கர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com