england test squd for india series
england test squd for india seriesweb

பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவான இங்கிலாந்து அணி அறிவிப்பு! தாக்குபிடிக்குமா கில்லின் இளம் படை!

ஜுன் 20-ம் தேதி தொடங்கவிருக்கும் இங்கிலாந்து-இந்தியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி ’ஜுன் 13 முதல் ஆக்ஸ்ட் 4’ வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பிறகு சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியை அறிவித்துள்ளது தேர்வுக்குழு.

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான வலுவான 14 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்ப்ரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி அறிவிப்பு!

ஜுன் 13-ம் தேதி தொடங்கி 4 நாட்கள் நடைபெறவிருக்கும் பயிற்சி போட்டியில் இரண்டு அணிகளும் விளையாடுகின்றன. அதனைத்தொடர்ந்து ஜுன் 20-ம் தேதி ஹெடிங்லி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடக்கவிருக்கிறது. இதற்கான இங்கிலாந்து அணியை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் அறிவித்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

14 வீரர்கள் கொண்ட இந்த அணியில் சிறந்த வரவாக வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் இணைக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன், ஜேக்கப் பெத்தல் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், ஒல்லி போப், பென் ஸ்டோக்ஸ் என நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓல்லி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் தங், கிறிஸ் வோக்ஸ்.

தாக்குபிடிக்குமா கில்லின் இளம் படை!

இந்திய அணியைப் பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, பும்ரா, கே.எல்.ராகுல் போன்றவர்கள் தான் அனுபவம் வாய்ந்த வீரர்கள். மற்றவர்கள் பெரும்பாலும் டெஸ்ட் அணிக்கு புதியவர்கள். ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்ததால் இந்திய அணிக்கு சற்றே பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

கில், விராட், ரோகித்
கில், விராட், ரோகித்pt web

அதுவும் மூத்த வீரர்கள் இருக்க கில்லை கேப்டன் ஆக அறிவித்தது விமர்சனத்திற்கு உள்ளானது. அவர் வலுவான இங்கிலாந்து அணியை எப்படி சமாளிக்கப்போகிறார் என்பது இனிமேல் தான் தெரியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com