\
ஸ்டார்க்
ஸ்டார்க்x

பும்ராவின் 697 நாட்கள் ஆதிக்கத்திற்கு முடிவு.. NO.1 டெஸ்ட் பவுலராகி ஸ்டார்க் சாதனை!

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஜஸ்பிரித் பும்ராவின் நம்பர் 1 டெஸ்ட் பவுலர் இடத்தை பறித்தார்.
Published on
Summary

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வரலாற்று தோல்வியிலிருந்து காப்பாற்றிய மிட்செல் ஸ்டார்க், முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் எடுத்து 10 விக்கெட்டுகளுடன் தொடரை 1-1 என சமன் செய்தார். இந்த அபார ஆட்டத்தால் 872 புள்ளிகள் பெற்று, 697 நாட்கள் ஆதிக்கம் செலுத்திய ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளி, முதல்முறையாக ஐசிசி நம்பர் 1 டெஸ்ட் பவுலராக உயர்ந்தார்.

வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தபிறகு, ஆஸ்திரேலியா 2வது டெஸ்ட் போட்டியில் ஒரு வரலாற்று தோல்வியை தவிர்க்கும் போராட்டத்தில் இருந்தது. ஒருவேளை இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியா தோற்றால், வங்கதேசம் 149 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சகாப்தத்தை எழுதும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

Ashes 1st Test AUS vs ENG 19 wickets fall on  opening day
Mitchell Starcx page

ஆனால் 2வது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய முழு பந்துவீச்சு திறமையும் வெளிப்படுத்திய மிட்செல் ஸ்டார்க் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை 64 ரன்களுக்கு சுருட்டி எறிந்தார். முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றிய ஸ்டார்க் ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.

தொடரை 1-1 என சமன்செய்ததோடு 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்த மிட்செல் ஸ்டார்க் 872 புள்ளிகளுடன் டெஸ்ட் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். கடந்த 697 நாட்களாக முதலிடத்தில் இருந்த ஜஸ்பிரித் பும்ராவை பின்னுக்கு தள்ளிய அவர், முதல்முறையாக ஐசிசியின் நம்பர் 1 டெஸ்ட் பவுலராக மாறி சாதனை படைத்தார்.

ஸ்டார்க்
முதல் 3 பந்தில் 3 விக்கெட்டுகள்! உலகில் 1 ஆள் மட்டுமே படைத்த சாதனை.. 2வது நபராக இணைந்த தமிழக வீரர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com