BANvNED | முதல் அணியாக உலகக் கோப்பையில் இருந்து வெளியேறப்போவது யார்?

இந்த உலகக் கோப்பையில் ஈடன் கார்டனில் நடக்கும் முதல் போட்டி இதுதான். கடந்த சில ஆண்டுகளாகவே ஈடன் மைதானம் இப்படித்தான் என்று உறுதியாகக் கூற முடிந்ததில்லை. சிறிய பௌண்டரிகள் இருப்பதால் பெரிய ஸ்கோர் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
Shakib Al Hasan
Shakib Al HasanSwapan Mahapatra
போட்டி 28: வங்கதேசம் vs நெதர்லாந்து
மைதானம்: ஈடம் கார்டன்ஸ், கொல்கத்தா
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 27, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

வங்கதேசம்

போட்டிகள் - 5, வெற்றி - 1, தோல்விகள் - 4, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2சிறந்த பேட்ஸ்மேன்: முஷ்ஃபிகுர் ரஹீம் - 205 ரன்கள்சிறந்த பௌலர்: மெஹதி ஹசன் மிராஜ் - 6 விக்கெட்டுகள்ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த உலகக் கோப்பையை மிகச் சிறப்பாகத் தொடங்கியது வங்கதேசம். ஆனால் அதன்பிறகு அவர்களால் வெற்றிக்கு அருகில் கூட வர முடியவில்லை. இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா என வரிசையாக பெரிய அணிகளிடம் அடி வாங்கியிருக்கிறது வங்கதேசம். சேஸ் செய்த போட்டிகளில் 130+ ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. முதலில் பேட் செய்த போட்டிகளிலோ குறைந்தபட்சம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி என எல்லம் படுதோல்விகளாகவே அமைந்திருக்கின்றன.

நெதர்லாந்து
போட்டிகள் - 5, வெற்றி - 1, தோல்விகள் - 4, முடிவு இல்லை - 0, புள்ளிகள் - 2
சிறந்த பேட்ஸ்மேன்: காலின் அகெர்மேன் - 137 ரன்கள்
சிறந்த பௌலர்: பாஸ் டி லீட் - 9 விக்கெட்டுகள்
தென்னாப்பிரிக்க அணியை அப்செட் செய்து அதிர்ச்சியைக் கிளப்பியது தான் இந்த உலகக் கோப்பையில் நெதர்லாந்து அணியின் ஒரே பாசிடிவ். மற்ற நான்கு போட்டிகளிலுமே பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியாமல் தோற்றிருக்கிறது அந்த அணி. அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய போட்டியில் உலகக் கோப்பை வரலாற்றின் மிகப் பெரிய தோல்வியை (309 ரன்கள்) பதிவு செய்தது அந்த அணி.

மைதானம் எப்படி இருக்கும்?

இந்த உலகக் கோப்பையில் ஈடன் கார்டனில் நடக்கும் முதல் போட்டி இதுதான். கடந்த சில ஆண்டுகளாகவே ஈடன் மைதானம் இப்படித்தான் என்று உறுதியாகக் கூற முடிந்ததில்லை. சிறிய பௌண்டரிகள் இருப்பதால் பெரிய ஸ்கோர் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

முழு ஆற்றலை வெளிப்படுத்துமா வங்கதேசம்

உலகக் கோப்பைக்கு முன்பு வங்கதேச அணியில் நிலவிய பிரச்சனைகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது போல. ஒட்டுமொத்த அணியும் இத்தொடரில் தடுமாறியிருக்கிறது. நான்கு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இத்தொடரில் 100 ரன்களைக் கடந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவர் கூட 200 ரன்களைத் தாண்டவில்லை. இந்திய துணைக் கண்டத்தில் நடக்கும் ஒரு தொடரில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. எந்த ஒரு வீரரிடமும் கன்சிஸ்டென்சி இல்லை. கேப்டன் ஷகிப் அல் ஹசன் கூட 4 இன்னிங்ஸ்களில் 56 ரன்களே எடுத்திருக்கிறார். பந்துவீச்சிலும் அப்படித்தான். ஹகிப், மெஹதி ஹசன் மிராஜ், ஷொரிஃபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார்கள். 5 போட்டிகளில் 6 விக்கெட்டுகள் சொல்லிக்கொள்ளும்படியானது இல்லையே! முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாஃபிசுர் ரஹ்மானோ 2 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஒரு பௌலர் கூட ஐந்துக்கும் குறைவான எகானமியில் பந்துவீசவில்லை. இப்படி வங்கதேசத்தின் குறைகள் நீண்டுகொண்டே செல்கிறது. இந்தப் போட்டியில் தோற்கும் அணி அதிகாரப்பூர்வமாக உலகக் கோப்பையில் இருந்து வெளியேறிவிடும். அதைத் தடுக்கவேண்டுமெனில் வங்கதேச அணியின் ஒவ்வொரு வீரரும் தங்களின் சிறந்த பெர்ஃபாமன்ஸைக் கொடுத்தாகவேண்டும். கேப்டன் ஷகிப் அல் ஹசன், தன் பெர்சனல் டிரெய்னரோடு பயிற்சி எடுக்க சிறு விடுப்பில் சென்றிருக்கிறார். மீண்டு வரும் அவர், தன் உலகத்தர செயல்பாட்டை கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

டாப்பை மொத்தமாக மாற்றியே தீரவேண்டும்

நெதர்லாந்தைப் பற்றி ஒவ்வொரு போட்டியின் பிரிவ்யூவிலும் இதைத்தான் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் - அந்த அணியின் டாப் ஆர்டர் மிகவும் சுமாராக இருக்கிறது என்று. அது கொஞ்சமும் மாறவில்லை. ஒரு போட்டியில் கூட அவர்கள் நல்ல தொடக்கம் கொடுக்கவில்லை. அந்த அணி எந்த புது முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. இது மாறினால் மட்டுமே நெதர்லாந்து அணி இரண்டாவது வெற்றியைப் பற்றி நினைத்துப் பார்க்க முடியும். தென்னாப்பிரிக்கா போன்ற ஒரு பெரிய அணியைத் தோற்கடித்துவிட்ட பிறகு இந்த உலக்க கோப்பையில் கொண்டாட வேறு ஏதேனும் இருக்கவேண்டும் அல்லவா!

கவனிக்கவேண்டிய வீரர்கள்

வங்கதேசம் - மஹ்மதுல்லா: உலகக் கோப்பையில் தன் மூன்றாவது சதத்தை பதிவு செய்து அசத்தியிருக்கும் மஹ்மதுல்லா, அந்த அணிக்கு உளவியல் ரீதியான நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.

நெதர்லாந்து - பாஸ் டி லீட்: ஷகிப் போன்ற ஒரு ஆல்ரவுண்டர் எதிரணியில் இருக்கும்போது, தானும் அந்த லீகில் தான் இருக்கிறேன் ற்னு டி லீட் அறிவிக்கவேண்டிய தருணம் இது. பௌலிங்கில் கைகொடுக்கும் அவர், பேட்டிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்தவேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com