ரூ.4.2 கோடிக்கு ஏலம்போன டான் பிராட்மேன் தொப்பி
ரூ.4.2 கோடிக்கு ஏலம்போன டான் பிராட்மேன் தொப்பிweb

ரூ.4.2 கோடிக்கு ஏலம்போன டான் பிராட்மேன் தொப்பி.. 75 ஆண்டுகளாக பாதுகாத்த இந்திய குடும்பம்!

1948ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஓய்வுக்கு முந்தைய தன்னுடைய கடைசி உள்நாட்டு டெஸ்ட் தொடரில் விளையாடிய டான் பிராட்மேன், தான் பயன்படுத்திய தொப்பியை இந்திய வீரர் சோஹோனிக்கு பரிசாக அளித்திருந்தார்.
Published on
Summary

கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத டான் பிராட்மேனின் பச்சை நிறத் தொப்பி, 75 ஆண்டுகளாக இந்திய குடும்பத்தால் பாதுகாக்கப்பட்டு, 4.2 கோடி ரூபாய்க்கு ஏலம்போனது. 1947-48 இந்திய சுற்றுப்பயணத்தின் போது பிராட்மேன் இந்த தொப்பியை இந்திய வீரர் சோஹோனிக்கு பரிசளித்தார். இது கிரிக்கெட்டின் புனிதப் பரிசாக கருதப்படுகிறது.

கிரிக்கெட்டின் வரலாற்று பக்கங்கள் டான் பிராட்மேன் என்ற பெயர் இல்லாமல் ஒருபோதும் இருந்துவிடாது. கடந்த தலைமுறை தொடங்கி இப்போதிருக்கும் தலைமுறையினர் வரை இவரின் ரெக்கார்டுகளை உடைக்க வேண்டும் என்பதே எண்ணமாக இருக்கும். அப்படிப்பட்ட ஓர் ஒப்பற்ற பேட்ஸ்மேன்தான் கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்றழைக்கப்படும் டான் பிராட்மேன்.

52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பிராட்மேன், 6,996 ரன்கள் சேர்த்து தனது சராசரியை 99.94 என வைத்துள்ளார். இவரின் 21 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் 29 சதங்களை விளாசியியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் டான் பிராட்மேன் வைத்துள்ள சராசரியை இதுவரை எந்தநாட்டு பேட்ஸ்மேன்களும் முறியடிக்கவில்லை என்பதுதான் பெரும் அதிசயம்.

இப்படி கிரிக்கெட் உலகமே கொண்டாடும் பிராட்மேனின் 75 ஆண்டுகால தொப்பி ஒன்று தற்போது 4.2 கோடி ரூபாய்க்கு ஏலம்போயுள்ளது. அதை 75 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தது ஒரு இந்திய வீரரின் குடும்பம்.

4.2 கோடிக்கு ஏலம்போன தொப்பி..

1947-48ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என இழந்தது. அந்த தொடரின்போது அப்போதைய இந்திய அணியில் இடம்பிடித்திருந்த இந்திய வீரர் ஸ்ரீரங்கா வாசுதேவ் சோஹோனிக்கு தன்னுடைய பச்சை நிறத் தொப்பியை பரிசாக கொடுத்திருந்தார் டான் பிராட்மேன்.

75 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த சோஹோனியின் குடும்பம் இன்று நடைபெற்ற லாயிட்ஸ் ஏலத்தில், டான் பிராட்மேன் பயன்படுத்திய தொப்பியை ஏலத்தில் விற்றுள்ளது, அவரின் தொப்பி 460,000 அமெரிக்க டாலர்களுக்கு (தோராயமாக ரூ. 4.2 கோடி) விற்கப்பட்டது.

கிரீன் நிறத்திலான தொப்பியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது, அதன் கீழ் "1947-48" என எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது. 1947-48 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான போட்டி, 1948 இல் ஓய்வு பெறுவதற்கு முன்பு பிராட்மேனின் கடைசி உள்நாட்டு டெஸ்ட் தொடராகும், இது 99.94 என்ற பேட்டிங் சராசரியுடன் ஓய்வு பெற்றது, இது அவருக்கு கிரிக்கெட்டின் சிறந்த பேட்டர் என்ற நற்பெயரைப் பெற்றுத் தந்தது.

ஏலத்தின் போது தொப்பியை "கிரிக்கெட்டின் புனிதப் பரிசு" என்று குறிப்பிட்ட லாயிட்ஸ் ஏலதாரர்கள், ஆஸ்திரேலியாவில் ஒரு முக்கிய அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com