\
dinesh karthik
dinesh karthikbcci / dinesh karthik

2027 உலகக்கோப்பைக்கான இந்திய அணி Squad-ஐ தேர்வுசெய்த தினேஷ் கார்த்திக்.. யார் யாருக்கு இடம்?

2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. அந்தவகையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவி சாஸ்திரியை தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும் தன்னுடைய அணி தேர்வை வெளிப்படுத்தியுள்ளார்.
Published on
Summary

2027 ஒருநாள் உலகக்கோப்பை தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியாவில் நடக்கவுள்ள நிலையில், இது ரோகித் சர்மா, விராட் கோலியின் கடைசி உலகக்கோப்பை என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தினேஷ் கார்த்திக் தன்னுடைய உலகக்கோப்பை இந்திய அணியை தேர்வுசெய்துள்ளார்.

2027 ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையானது தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் உள்ள பன்னிரண்டு மைதானங்களில் நடைபெறவிருக்கின்றது.

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியாவின் இருபெரும் ஜாம்பவான் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் கடைசி உலகக்கோப்பையாக இது பார்க்கப்படுகிறது. இதனால் உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்திய ஒருநாள் அணி
இந்திய ஒருநாள் அணிAP

இந்நிலையில் இந்திய அணியின் உலகக்கோப்பை ஸ்குவாட் எப்படி இருக்கப்போகிறது, தென்னாப்பிரிக்கா போன்ற ஆடுகளங்களில் அனுபவமற்ற வீரர்கள் எப்படி விளையாட போகிறார்கள், ரோகித்-கோலியின் இடம் உறுதி செய்யப்படுமா என்ற பல குழப்பங்கள் சென்றுகொண்டிருக்கிறது.

இந்தசூழலில் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஸ்குவாடை கணித்துள்ளார் இந்தியாவின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்.

dinesh karthik
ஓய்வை அறிவித்தார் அஜிங்கியா ரஹானே.. புகழ்ந்து பதிவிட்ட சச்சின் டெண்டுல்கர்!

தினேஷ் கார்த்திக்கின் அணியில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் சுப்மன் கில், விராட் கோலி, ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் என 5 பேர் இடம்பெற்றுள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷனை தேர்வுசெய்துள்ளார்.

ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி என 3 பேரை இணைத்துள்ளார். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் சமீபத்தில் அணியில் இல்லாத மூத்த வீரர்கள் 3 பேரை சேர்த்துள்ளார். ஜஸ்பிரித் பும்ரா உடன் முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், முகமது ஷமியை வேகப்பந்துவீச்சாளர்களாகவும், குல்தீப் யாதவை ஒரேயொரு ஸ்பின்னராகவும் தேர்வுசெய்துள்ளார்.

தினேஷ் கார்த்திக்கின் இந்த அணித்தேர்வை இந்திய ரசிகர்கள் வரவேற்றாலும், சமீபத்தில் இந்திய ஒருநாள் இடம்பெறாத பவுலர்களை எப்படி அப்படியே உலகக்கோப்பைக்கு அழைத்துச்செல்ல முடியும் என்ற கேள்வியையும் வைத்துவருகின்றனர்.

dinesh karthik
2027 ODI உலகக்கோப்பை Squad-ஐ கணித்த அஸ்வின்.. 13 வீரர்கள் IN.. 9 பேர் OUT! எதிர்பாராத வீரர் தேர்வு!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com