13 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்! 93 ரன்கள் குவித்த DK! RCB போட்ட கணக்கு தப்பாகல! A Finisher Is Back!

விஜய் ஹசாரே டிராபியில் அதிரடி காட்டி மிரட்டி வருகிறார் முன்னாள் இந்திய வீரர் மற்றும் RCB வீரரான தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்விஜய் ஹசாரே டிராபி

2024 ஐபிஎல் தொடரானது இந்தியாவின் மூத்த வீரர்களான எம்.எஸ். தோனி, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முதலிய 3 வீரர்களுக்கும் முக்கியமான தொடராகும். எம்.எஸ்.தோனியின் கடைசி ஐபிஎல் என்பதாலும், ரோகித் சர்மாவிற்கு ஒருவேளை இதுதான் கேப்டனாக கடைசி ஐபிஎல்லாக இருக்கும் என்பதாலும், விராட் கோலியின் டி20 எதிர்காலம் முடியப்போகிறது என்ற பேச்சு இருப்பதாலும், இந்த வருட ஐபிஎல் என்பது இந்த 3 ஐகான் வீரர்களின் ரசிகர்களுக்கு முக்கியமான வருடமாக இருக்கப்போகிறது.

இதனால்தான் ரோகித் சர்மாவிற்காக கோப்பையை வெல்லும் நோக்கில் மும்பை அணி மீண்டும் ஹர்திக் பாண்டியாவை எடுத்துவந்துள்ளது. அதேபோல் ஆர்சிபி அணியும் இருக்கும் பவுலர்களை எல்லாம் வெளியே அனுப்பி, பினிசர் ரோலில் மும்பை வீரர் காம்ரான் க்ரீனை விலைக்கு வாங்கியிருக்கிறது. இந்த இரண்டு அணிகளும் கோப்பையை வெல்ல தீவிரம் காட்டுகின்றன.

தினேஷ் கார்த்திக்கை தக்கவைத்தது ஆச்சரியமாக இருந்தது! - டிவில்லியர்ஸ்

இந்நிலையில் ஆர்சிபி அணியில் மீண்டும் தினேஷ் கார்த்திக் தக்கவைக்கப்பட்டது ஒரு பெரிய கேள்வியாகவே இருந்து வருகிறது. ”அவரே கிரிக்கெட்டை விட்டு வர்ணனையாளராக போய்ட்டாரு, அவர ஏன் பா எடுத்திருக்கீங்க?, கடந்த ஐபிஎல்ல என்ன பண்ணிட்டார்?” என பல கேள்விகளும், விமர்சனங்களும் வைக்கப்பட்டது.

RCB
RCB

அதேபோல முன்னாள் ஆர்சிபி வீரரான டிவில்லியர்ஸ் கூட “தினேஷ் கார்த்திக்கை தக்கவைத்து, முக்கியமான பவுலர்களை வெளியேற்றியது ஆச்சரியமாக இருந்தது?” என்றும் பேசியிருந்தார். ஆனால் அனைத்து கேள்விக்கும், விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையிலான ஒரு ஆட்டத்தை தினேஷ் கார்த்திக் விஜய் ஹசாரே தொடரில் வெளிப்படுத்திவருகிறார்.

தினேஷ் கார்த்திக்
"காலங்காலமாக RCB அணிக்கு இருக்கும் கவலை, இந்தமுறை அதிகமாக இருக்கிறதோ என தோன்றுகிறது" - டிவில்லியர்ஸ்

47, 68, 93 விஜய் ஹசாரே தொடரில் கலக்கி வரும் தினேஷ் கார்த்திக்!

ஃபார்ம் அவுட்டில் இருக்கும் வீரரை எதற்கு RCB தக்கவைக்கிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஒரு அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திவருகிறார் தினேஷ் கார்த்திக். தற்போது நடைபெற்றுவரும் விஜய் ஹசாரோ தொடரில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக இருந்துவரும் தினேஷ் கார்த்திக், அணியை வெற்றிக்காக அழைத்து செல்வதில் முன்னிலை வகித்து வருகிறார்.

Dinesh Karthik
Dinesh Karthik

தொடரின் முதல் போட்டியில் கோவாவிற்கு எதிரான போட்டியில் சாய் சுதர்சனின் சதம் (123 ரன்கள்) மற்றும் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி 47 ரன்களாலும் தமிழ்நாடு அணி 298 ரன்களை குவித்தது. 31 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக் 151 ஸ்டிரைக் ரேட்டில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை விளாசி 47 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து பரோடா அணிக்கு எதிரான போட்டியில் 51 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக், கடினமான ஆடுகளத்தில் 9 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என விளாசி 68 ரன்கள் அடித்தார். அந்தப் போட்டியில் அவரை தவிர ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை.

Dinesh Karthik
Dinesh Karthik

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தனியொரு ஆளாக தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு போராடிய தினேஷ் கார்த்திக், ஒரு கலக்கலான இன்னிங்ஸை ஆடினார். ப்ரைம் ஃபார்மில் பந்துவீசி 5விக்கெட்டுகளை வீழ்த்திய சித்தார்த் கவுலுக்கும், அணிக்காக வெளுத்து வாங்கிய தினேஷ் கார்த்திக்கும் இடையே நீயா நானா போட்டியாகவே மாறியது.

டாப் ஆர்டர்களான சாய் சுதர்சன், ஜகதீசன், அபரஜித் மற்றும் விஜய் சங்கர் என அனைவரையும் வெளியேற்றிய சித்தார்த் கவுல் தினேஷ் கார்த்திக் அதிரடியில் மிரண்டு போனார். 82 பந்துகளில் 13 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய தினேஷ் கார்த்திக் தனியொரு ஆளாக போராடினார். ஆனால் 93 ரன்களில் இருந்த தினேஷ் கார்த்திக்கை வெளியேற்றிய சித்தார்த் கவுல், தனியொரு பவுலராக தமிழ்நாட்டின் வெற்றியை தட்டிச்சென்றார்.

Dinesh Karthik
Dinesh Karthik

ஆனால் ஆர்சிபி அணி ரசிகர்களுக்கு தினேஷ் கார்த்திக்கின் இந்த அதிரடி பேட்டிங் நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். 2022 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு பினிசராக ஜொலித்த தினேஷ் கார்த்திக் 16 போட்டிகளில் விளையாடி 50 சராசரியுடன் 180 ஸ்டிரைக்ரேட்டில் 330 ரன்களை குவித்திருந்தார். தற்போது மீண்டும் தினேஷ் கார்த்திக்கை ஆர்சிபி அணி தக்கவைத்திருக்கும் நிலையில், பினிசராக மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளார் தினேஷ் கார்த்திக். A Finisher Is Back!

தினேஷ் கார்த்திக்
உலகக்கோப்பை மீது கால் வைத்ததில் எந்த அவமரியாதையும் இல்லை! - மிட்செல் மார்ஸ் விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com