”இந்தியா 100 உலகக் கோப்பைகளை வெல்லட்டும்..” - மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி, பருல் பல்கலைக்கழக நிகழ்வில் இந்திய அணி இன்னும் 100 உலகக்கோப்பைகளை வெல்ல கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என வாழ்த்து தெரிவித்தார். 2019ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடி வரும் அவர், ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார்.
2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், இன்னும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறார் மகேந்திர சிங் தோனி.. என்னதான் அவர் கிரிக்கெட் கிரவுண்டிலிருந்து வெளியே இருந்தாலும், அவ்வப்போது அவர் பேசும் செய்திகள் தலைப்புசெய்திகளாக இடம்பெறுவது வழக்கமாக இருந்துவருகிறது.. அந்தளவு ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்..
அந்தவகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மகேந்திர சிங் தோனி, இந்திய அணி இன்னும் 100 கோப்பைகளை வெல்ல கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என பேசியிருப்பதும் தலைப்புசெய்தியாக மாறியுள்ளது..
குஜராத்தில் வதோதராவில் உள்ள பருல் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி.. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாடலில் ஈடுபட்ட தோனி, இந்திய அணி குறித்து மனம்திறந்து பேசினார்..
அப்போது பேசிய அவர், இந்திய அணி இன்னும் 100 உலகக்கோப்பைகளை வெல்ல கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உலகக்கோப்பையை வெல்வது என்பது தான் ஒரு கிரிக்கெட் வீரருக்கு எல்லாவற்றையும் விட சிறந்த உணர்வாக இருக்கும் என பேசியுள்ளார்..
2026 ஐபிஎல் தொடர் தோனியின் கிரிக்கெட் பயணத்தில் கடைசி வருடமாக இருக்கும் என சொல்லப்படும் நிலையில், அவரை கடைசியாக களத்தில் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்..

