\
இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்cricinfo

10 ரன் மட்டுமே.. 5 விக்கெட்டுகள் வீழ்த்திய தீப்தி சர்மா.. பாகிஸ்தானை ஊதித்தள்ளிய இந்தியா!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் 64 ரன்கள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது இந்திய மகளிர் அணி.
Published on
Summary

இந்தியாவின் தீப்தி சர்மா 4 ஓவரில் 10 ரன்கள் மட்டுமே வழங்கி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி பாகிஸ்தானை சிதறடித்தார். ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். ஸ்ரீசரணி 3 விக்கெட்டுகள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு முனீபா 41 ரன்கள் எடுத்தும் அணியை காப்பாற்ற முடியவில்லை. இந்தியா +3.200 NRR உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

10ஆவது மகளிர் டி20 உலகக்கோப்பை கடந்த ஜூன் 12ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 12 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடர் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா அணி குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

ஸ்மிருதி
ஸ்மிருதி

இந்நிலையில் தங்களுடைய முதல் லீக் போட்டியில் விளையாடிய இந்திய அணி, முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொண்டு விளையாடியது. பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை 106 ரன்னுக்கு சுருட்டிய இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் அபாரமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 68 ரன்களும், கேப்டன் ஹர்மன்ப்ரீத் 36, ரிச்சா கோஸ் 200 ஸ்ட்ரைக்ரேட்டில் 34 ரன்களும் அடித்து அசத்த 170 ரன்களை குவித்தது இந்தியா. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி தீப்தி சர்மாவின் அசாதாரமாண பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 106 ரன்களுக்கே சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

தீப்தி சர்மா
தீப்தி சர்மா

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய தீப்தி சர்மா, 4 ஓவரில் வெறும் 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். பக்கபலமாக பந்துவீசிய ஸ்ரீசரணி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பாகிஸ்தானில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் முனீபா 41 ரன்கள் அடித்தார். இந்த வெற்றியின் மூலம் +3.200 NRR உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்திய அணி.

இந்தியா - பாகிஸ்தான்
FIFA உலகக்கோப்பையில் முதல்முறை.. வீரராக களமிறங்கிய தமிழர்.. முதல் ஆட்டத்திலேயே அபார வெற்றி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com