பொத்திபொத்தி வச்ச கோலி, இந்திய அணி! பொசுக்குனு ரிவீல் செய்த டி வில்லியர்ஸ்! Good News!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஏன் இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை என்ற குழப்பம் நீடித்த நிலையில், ஒரு நல்ல செய்தியுடன் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவருடைய நண்பரான டி வில்லியர்ஸ்.
de villiers - virat kohli
de villiers - virat kohliweb

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகினார். ஆனால் அவரின் விலகலுக்கான காரணத்தை பிசிசிஐ பகிரவில்லை. மாறாக யாரும் அவர் விலகியதற்கான காரணத்தை ஊகிக்க வேண்டாம் என்ற கோரிக்கையையும் பிசிசிஐ முன்வைத்தது.

ஆனால் அந்தநேரத்தில் ராமர் கோயில் திறப்பு, இந்தியாவின் வரலாற்று டெஸ்ட் தோல்வி, பொதுவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட போலி விராட் கோலி மனிதர் என தொடர்ந்து விராட் கோலியின் இருப்பு கேள்விக்குறியாக இருந்துவந்தது. கோலி அணியுடனும் இல்லை, வெளியிலும் இல்லை எங்குதான் இருக்கிறார் என்ற கேள்வியும், அவர் இந்தியாவிலேயே இல்லை என்ற செய்தியும், அதற்கும் மேலாக விராட் கோலியின் அம்மா உடல்நலக்குறைவாக இருக்கிறார் என்ற வதந்தியும் வேகமாக பரவின.

இந்நிலையில் வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், விராட் கோலி குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார் என்றும், கோலி மற்றும் அனுஷ்கா ஜோடி தங்களுடைய இரண்டாவது குழந்தையை எதிர்ப்பார்க்கின்றனர் என்றும் டி வில்லியர்ஸ் வெளிப்படுத்தியுள்ளார்.

கோலி-அனுஷ்கா 2வது குழந்தையை எதிர்ப்பார்க்கின்றனர்!

தன்னுடைய யூ-டியூப் பக்கத்தில் கோலி பேசியிருக்கும் ஏபிடி வில்லியர்ஸ், “எனக்குத் தெரியும், அவர் நன்றாக இருக்கிறார். அவர் தனது குடும்பத்தினருடன் சிறிது நேரம் செலவிடுகிறார், அதனால்தான் அவர் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. வேறு எதையும் நான் உறுதிப்படுத்தப் போவதில்லை. ஆனால் அவர் மிகவும் நன்றாக இருக்கிறார்" என்று ஏபி டி வில்லியர்ஸ் தனது யூடியூப் வீடியோவில் கூறினார்.

virat kohli - de villiers
virat kohli - de villiers

ஆனாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத வில்லியர்ஸ் கோலியுடனான உரையாடலை ரசிகர்களுடன் பகிர்ந்தார். அப்போது பேசிய அவர், “கோலியுடன் பேசிய போது அவர் என்ன சொன்னார் என்பதை நான் பார்க்கிறேன். குறைந்தபட்சம் உங்களுக்கு கொஞ்சம் அன்பையாவது கொடுக்க விரும்புகிறேன்.

நான் அவருக்கு “கொஞ்ச காலமாக நான் உங்களை எப்படியிருக்கிறீர்கள் என செக் செய்ய விரும்பினேன். எப்படி இருக்கிறீர்கள்?” என்று எழுதினேன். அவர் “இப்போது என் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், நான் நன்றாக இருக்கிறேன்” என்றார்.

ஆமாம், கோலி-அனுஷ்கா இருவரும் அவர்களுடைய இரண்டாவது குழந்தையை எதிர்ப்பார்க்கிறார்கள். இது அவருக்கு குடும்பத்துடன் இருக்கவேண்டிய நேரம். பெரும்பாலானவர்களின் முன்னுரிமை குடும்பம் என்று தான் நான் நினைக்கிறேன். அவருடைய இந்த முடிவை நான் பாராட்டுகிறேன். ஆனால் அதற்காக நீங்கள் விராட்டை மதிப்பிட முடியாது. ஆம், நாம் அவரை நிச்சயமாக மிஸ் செய்கிறோம். இருப்பினும் தற்போது அவர் முற்றிலும் சரியான முடிவை எடுத்துள்ளார்” என்று டி வில்லியர்ஸ் மேலும் கூறினார்.

அனுஷ்கா - கோலி
அனுஷ்கா - கோலி

2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இருவரும் 2021-ல் தங்களுடைய முதல் குழந்தையான வாமிகாவை வரவேற்றனர். தங்களுடைய குழந்தையின் மூன்றாவது பிறந்தநாளை இந்த வருடம் ஜனவரியில் கொண்டாடிய இருவரும் தற்போது இரண்டாவது குழந்தையை வரவேற்க காத்திருக்கின்றனர். குறிப்பிடத்தக்க வகையில் 2021ம் ஆண்டு முதல் குழந்தைக்கான பிரசவத்தின் போது மனைவியுடன் இருக்கவேண்டும் என்பதற்காக 4 போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறினார் விராட் கோலி.

டி வில்லியர்ஸ் பகிர்ந்தது நல்ல செய்தியாக இருந்தாலும், தனிப்பட்ட காரணங்களுக்கு மதிப்பளித்து பிசிசிஐ மற்றும் இந்திய அணி மறைத்து வைத்திருந்த விசயத்தை அதீத மகிழ்ச்சியில் டி வில்லியர்ஸ் வெளியில் சொல்லியிருப்பதை ரசிகர்கள் கலாட்டாவாக கலாய்த்து வருகின்றனர்.

de villiers - virat kohli
3 இந்தியர்களால் மட்டுமே படைக்கப்பட்ட சாதனை! ரவிசாஸ்திரி, சச்சினை தொடர்ந்து 4வது வீரரான ஜெய்ஸ்வால்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com