‘கனவு நனவானது... ஸ்கூல் க்ரஷ் to வருங்கால மனைவி’ - சிஎஸ்கே துஷார் தேஷ்பாண்டேவுக்கு நிச்சயதார்த்தம்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளரான தேஷ்பாண்டேவுக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
Tushar Deshpande-Nabha Gaddamwar
Tushar Deshpande-Nabha GaddamwarTushar Deshpande instagram

அண்மையில் நடந்துமுடிந்த ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் குஜராத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி 5-வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. இந்தப் போட்டி நடந்து முடிந்ததும், சென்னை அணியின் துவக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட், கிரிக்கெட் வீராங்னையும், தனது நீண்ட நாள் காதலியுமான உட்கர்ஷா பவாரை கடந்த வாரம் கரம் பிடித்தார். தற்போது ருதுராஜை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரரான துஷார் தேஷ்பாண்டேவுக்கு நபா கடம்வார் என்பவருடன் நிச்சயதார்த்தம் நேற்று நடந்து முடிந்துள்ளது.

கிரிக்கெட் பந்தில் நிச்சயதார்த்த மோதிரத்தை வைத்து, பின்னர் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள துஷார் தேஷ்பாண்டே, ‘பள்ளி காதலியிலிருந்து வருங்கால மனைவி’ என்ற கேப்ஷனுடன் அதனை பகிர்ந்துள்ளார். இந்த நிச்சயதார்த்த விழாவில் சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே தனது மனைவியுடன் கலந்துகொண்டார்.

ருதுராஜ் வாழ்த்துகள் தெரிவித்து, திருமண பந்த கிளப்பிற்கு வரவேற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகமும் தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்துள்ளனர்.

நடப்பு ஐபிஎல் தொடரில், மொத்தம் 16 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் துஷார் தேஷ்பாண்டே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com