dhoni
dhoniweb

2026 ஐபிஎல்| தொடக்க நாளிலேயே சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. வெளியான முக்கிய தகவல்!

2026 ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், தொடக்க நாளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது..
Published on
Summary

2026 ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவிருக்கும் நிலையில், தொடக்க நாளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனியின் காயம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது..

ஐபிஎல் தொடரின் 19வது சீசன் மார்ச் 28ஆம் தேதியான இன்று முதல் தொடங்கவிருக்கிறது. எப்போதும் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கும் ஐபிஎல் தொடர், இந்தமுறை கலை நிகழ்ச்சிகள் இல்லாமல் தொடங்கப்பட உள்ளது.

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணியுடன் மோத உள்ள நிலையில், இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆர்சிபி வெற்றிக்கொண்டாட்டத்தின் போது நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த நிலையில், இந்த முறை பெங்களூரு ஸ்டேடியத்தில் கலை நிகழ்ச்சிகளை தவிர்த்துள்ளது பிசிசிஐ.

2026 ஐபிஎல் அப்டேட்
2026 ஐபிஎல் அப்டேட்web

2026 ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் இளம் வீரர்கள் அதிகம் பேர் இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கோப்பைக்காக 10 அணிகளும் தீவிரமாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒருபக்கம் OG சாம்பியன் அணிகளான மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 6வது கோப்பைக்காக களம்புகுகின்றன.

மறுபக்கம் 17 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பை வென்ற ஆர்சிபி அணி கோப்பையை தக்கவைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டிவருகிறது. இந்தசூழலில் 2026 ஐபிஎல் தொடரானது மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே இன்று தொடங்குகிறது.

dhoni
தோனி விக்கெட் கீப்பிங் செய்வாரா..? ஃபீல்டிங் பயிற்சி எடுக்கும் சஞ்சு சாம்சன்!

தோனி ரசிகர்களுக்கு அதிர்ச்சி..

2026 தொடக்க நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களின் அப்டேட்டின் படி, “எம்.எஸ். தோனிக்கு கால் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் தற்போது சிகிச்சையில் இருக்கிறார். இதன் விளைவாக, அவர் டாடா ஐபிஎல் 2026 தொடரின் முதல் இரண்டு வாரப் போட்டிகளைத் தவறவிட வாய்ப்புள்ளது. விரைவில் குணமடையுங்கள், தல” என எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வலைப்பயிற்சிக்கு பிறகு தோனி காலை தாங்கி தாங்கி நடந்து செல்வது போன்ற காட்சிகள் வெளிவந்தன. அப்போதே அவருக்கு காயம் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன.

அதுமட்டுமில்லாமல் ROAR 26 நிகழ்ச்சியில் கூட சிவகார்த்திகேயன் எழுப்பிய ஓய்வு குறித்த கேள்விக்கு, தன்னுடைய ஃபிட்னஸ் குறைந்துகொண்டே செல்வதாக தோனி கூறியிருந்தார். இந்நிலையில் ஒருவேளை தோனி கம்பேக் கொடுக்காமல், சஞ்சு சாம்சன் அணிக்கு தேவையான வெற்றியை தேடித்தர ஆரம்பித்துவிட்டால் தோனியின் ஓய்வு அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்..

dhoni
ஓய்வு குறித்து கேள்வி எழுப்பிய சிவகார்த்திகேயன்.. தோனி கொடுத்த அந்த பதில்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com