ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவேண்டும் என்பது எனது பெரிய ஆசை! - அழைப்பை பெற்ற வெங்கடேஷ் பிரசாத்!

ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடக்கவிருக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வெங்கடேஷ் பிரசாத்
வெங்கடேஷ் பிரசாத்X

ராமர் பிறந்த இடம் என நம்பப்படும் அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் ராமருக்காக பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ஆண்டு தொடக்கப்பட்ட கட்டுமான பணிகள் தற்போது நிறைவுபெறப்பட்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது. நீண்டகாலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகமானது ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடக்கவிருக்கிறது. இந்திய வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பிரமாண்ட நிகழ்வாக பார்க்கப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு வி.வி.ஐ.பி.க்கள் அழைப்பு பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 700 விஐபிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Ramar Statue
Ramar Statue

கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோகித் சர்மா, எம்.எஸ். தோனி முதலிய பல முன்னணி கிரிக்கெட் வீரர்களுக்கும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் தான் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத்துக்கும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பிரசாத் அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய தருணத்தில் பங்கேற்பதில் பெருமை!

ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவது என்னுடைய பெரிய விருப்பம் என தெரிவித்திருக்கும் வெங்கடேஷ் பிரசாத், “என் வாழ்நாளில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் என்பது என்னுடைய பெரிய நம்பிக்கை மற்றும் ஆசை. இது என்னுடைய வாழ்வில் ஒரு மிகச்சிறந்த தருணம், ஜனவரி 22 அன்று கும்பாபிஷேகம் நடைபெறுவது மட்டுமல்லாமல், எனது வாழ்நாளில் இந்தியாவின் மிகப்பெரிய தருணத்தில் கலந்துகொள்ளும் பெரும் அதிர்ஷ்டமும் ஆசீர்வாதமும் எனக்கு கிடைத்துள்ளது. என்னை அழைத்ததற்கு நன்றி. ஜெய் ஸ்ரீ ராம்!” என பதிவிட்டுள்ளார்.

ஜனவரி 22-ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு அழைக்கப்படும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று கோயில் அறக்கட்டளை அறிவித்துள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கும் நிர்வகிப்பதற்கும் நிறுவப்பட்ட ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையானது, பங்கேற்கும் விருந்தினர்களுக்கு புனித பிரசாதம் தவிர, கீதை அச்சகம் வெளியிட்ட ‘அயோத்தியா தர்ஷன்’ புத்தகத்தின் பிரதிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com