ஓராண்டாக தொடரும் காதல்.. பெற்றோர்கள் பச்சைக்கொடி! சமாஜ்வாதி எம்பி-யை கரம் பிடிக்கிறார் ரிங்கு சிங்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜ்-ஐ திருமணம் செய்ய இருக்கிறார். இத்தகவலை பிரியா சரோஜின் குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரு குடும்பத்தினரும் நேரில் பேசி திருமணத்தை உறுதி செய்துள்ளதாக பிரியா சரோஜின் தந்தையும் உத்தரப்பிரதேசத்தின் கெராகத் தொகுதி எம்எல்ஏவுமான துஃபானி சரோஜ் கூறினார்.
ரிங்குவும் பிரியாவும் ஓராண்டாகவே பழகிவந்ததாகவும் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளதாகவும் துஃபானி சரோஜ் கூறினார்.
எப்போது திருமணம்?
ரிங்கு சிங் இன்னும் சில வாரங்களில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும், அடுத்து ஐபிஎல் தொடரிலும் விளையாட உள்ளார்.
அதேபோல நாடாளுமன்ற பட்ஜெட் தொடர் இன்னும் 10 நாட்களில் தொடங்கும் நிலையில், அதில் பிரியா சரோஜ் கலந்துகொள்ள வேண்டியுள்ளது.
எனவே இன்னும் சில மாதங்களுக்கு பிறகே திருமணம் நடைபெறும் எனத் தெரிகிறது.