ஒலிம்பிக்கில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது கிரிக்கெட்!

இன்றைக்கு நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைப்பதற்கான ஒப்புதல் வழங்கியுள்ளது அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் கமிட்டிக்குழு.
Cricket in Olympic
Cricket in OlympicTwtter

ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டும் ஒரு அங்கமாக சமீபத்தில் சேர்க்கப்பட்டது. சீனாவில் நடந்துமுடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் கிரிக்கெட் பிரிவில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்கப்பதங்களை வென்று அசத்தியிருந்தன. அதனைத்தொடர்ந்து ஒலிம்பிக்கிலும் கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளை இணைப்பதற்கான வேலையை ஒலிம்பிக் கமிட்டிக்குழு செய்துவந்தது.

olympic and cricket
olympic and cricketfreepik

1900ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஒரு அங்கமாக இருந்த கிரிக்கெட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் பேச்சுவார்த்தை இன்று நேற்றல்ல பலவருடங்களாக இருந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை கிரிக்கெட் உலகில் டி20 வடிவம் அறிமுகமானதும் அதிகமுக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட மூன்று போட்டிகள் மீண்டும் இணைக்கப்படும் என்றும், புதிதாக இரண்டு போட்டிகளும் சேர்க்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. இவை மும்பையில் நடைபெறும் 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

உலக கிரிக்கெட்டின் முகமாக இடம்பெற்ற விராட் கோலி!

2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில், புதிதாக பேஸ்பால், சாஃப்ட்பால், லாக்ரோஸ், ஸ்குவாஷ் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளை சேர்க்க வேண்டுமென ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழுவான லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு, ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை மீதான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மும்பையில் நடைபெறும் 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில், “பேஸ்பால் மற்றும் சாப்ட்பால், கிரிக்கெட் மற்றும் லாக்ரோஸ் முதலிய விளாட்டுக்கள் மீண்டும் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு திரும்புவதாகவும், அதே நேரத்தில் கொடி கால்பந்து மற்றும் ஸ்குவாஷ் முதலிய விளையாட்டுக்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுவதாகவும்” அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புதிதாக 6 விளையாட்டுக்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் முக்கியத்துவம் பெற்றது என்னவென்றால் “கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைப்பதற்கு பரிந்துரை செய்ததற்கான முதன்மை காரணம் விராட் கோலி தான் என லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டுக்குழு டைரக்டர் கூறியதும், உலக கிரிக்கெட்டின் முகமாக ஒலிம்பிக் விளையாட்டில் விராட் கோலியின் முகம் இடம்பெற்றிருப்பதும்” அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இது கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொன்னான நாளாகும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com