கில், கோலி இடையே வெடித்த மோதல்? விராட் இடத்திற்கே ஆபத்து! கம்பீர் தான் காரணமா?
வெஸ்ட் இண்டீஸ் தொடரை முன்னிட்டு திருவனந்தபுரத்தில் நடந்த பயிற்சியில் கில்–கோலி இடையே ஏற்பட்ட வாக்குவாதம், இந்திய அணியின் உள்ளக பதற்றத்தை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். உலகக்கோப்பை திட்டத்தில் கம்பீர் குழு, கோலியை நம்பர் 4க்கு தள்ளி, கில்லைக் நம்பர் 3ல், ஜெய்ஸ்வாலைக் ஓப்பனராக பயன்படுத்த விரும்புவதாக தகவல்.
2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான தயாரிப்புக்கு இப்போதே இந்தியா தயாராகிவிட்டது. பெரிய கோப்பைக்கு இடையில் குறைவான போட்டிகளே இருக்கும் சூழலில், இந்திய அணி அவர்களுடைய 15 வீரர்களை கண்டறியும் பரீட்சையில் உள்ளது. இதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடப் போகும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் உதவும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முதல் போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடக்கவிருக்கும் நிலையில், போட்டிக்கு முந்தைய பயிற்சி அமர்வில் இந்திய கேப்டன் கில்லுக்கும், மூத்த வீரர் விராட் கோலிக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்படும் வீடியோவில், கோலியும், கில்லும் வாக்குவாதம் செய்துகொள்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. விராட் கோலி எதையோ சொல்ல, சுப்மன் கில் அதற்கு பதில் கூறுகிறார். அதில் கோலிக்கு விருப்பம் இல்லாதது அவருடைய உடல்மொழியிலேயே தெரிகிறது. இந்தசூழலில் தான் விராட் கோலிக்கும், கில்லுக்கும் இடையேயான மோதலுக்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய ஒருநாள் அணி அப்டேட்டின் படி, டாப் 5 வீரர்களில் ஒருவர் கூட இடதுகை பேட்ஸ்மேன் கிடையாது. இது இந்திய அணிக்கு உலகக்கோப்பை போன்ற பெரிய தொடரில் முக்கிய பிரச்னையாக மாறலாம் என கணிக்கப்படுகிறது. இந்தசூழலில் தான் விராட் கோலியை நம்பர் 3 இடத்தில் களமிறக்காமல் 4வது வீரராக களமிறக்கும் முடிவை கம்பீர் மற்றும் குழு பரிந்துரைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்குபதிலாக சுப்மன் கில்லை நம்பர் 3 வீரராக விளையாட அனுமதித்து, இடது கை பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ஓப்பனிங் இடத்தில் களமிறக்கும் திட்டம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் முன்னணி பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற குறை சரியாகும் என கம்பீர்குழு நம்புகிறது. ஆனால் நம்பர் 3 இடத்தில் பல சாதனைகளையும், மேட்ச் வின்னிங் ஆட்டத்தையும் விளையாடியிருக்கும் கோலிக்கு இது பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதன்காரணமாகவே இந்திய அணிக்குள் விரிசல் விழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருப்பது தேர்வுக்குழு மற்றும் கம்பீருக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படும் நிலையில், தற்போது கில் மற்றும் கோலிக்கு இடையே மோதல் என வெளியாகியிருக்கும் செய்தி உலகக்கோப்பையை வெல்லவேண்டும் என்ற இந்திய அணியின் லட்சியத்திற்கு பாதகமாக அமையும் என ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நாளை இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி பகல் 2 மணிக்கு நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

