IPL 2025FACEBOOK
கிரிக்கெட்
MI ஐ 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய CSK! அபார வெற்றி!
சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை, 9 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
சென்னையில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை, 9 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகளவாக திலக் வர்மா 31 ரன்களும், சூர்ய குமார் 29 ரன்களும் எடுத்தனர். சென்னை சார்பில் நூர் அகமது 4 விக்கெட்களும், கலீல் அகமது 3 விக்கெட்களும் எடுத்தனர்.
இதன் பிறகு பேட்டிங் செய்த சென்னை 19.1 ஓவரில் இலக்கை எட்டி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய ரச்சின் 65 ரன்களும் கேப்டன் கெய்க்வாட் 53 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் விக்னேஷ் 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.