இன்று தொடங்கிய CCL 12வது சீஸன் | 8 அணிகள் மோதல்.. பெயர் மாற்றம் பெற்ற சென்னை அணி!
இந்தியாவின் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்களாக அவதாரம் எடுக்கும் CCLதொடரின் 12-வது சீசன் இன்று தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தியாவின் முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் கிரிக்கெட் வீரர்களாக அவதாரம் எடுக்கும் CCLதொடரின் 12-வது சீசன் இன்று தொடங்கி பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வேல்ஸ் சென்னை கிங்ஸ் (தமிழ் - கோலிவுட்), மும்பை ஹீரோஸ் (இந்தி - பாலிவுட்), தெலுங்கு வாரியர்ஸ் (தெலுங்கு - டாலிவுட்), கர்நாடகா புல்டோசர்ஸ் (கன்னடம் - சாண்டல்வுட்), கேரள ஸ்ட்ரைக்கர்ஸ் (மலையாளம் - மாலிவுட்), பெங்கால் டைகர்ஸ் (வங்காளம்), போஜ்புரி தபாங்ஸ் (போஜ்புரி), பஞ்சாப் டி ஷெர் (பஞ்சாபி) என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இப்போட்டிகள், விசாகப்பட்டினம், கோயம்புத்தூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. இதற்கிடையே, இந்த சீசன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைகிறது, ஏனெனில் ’சென்னை ரைனோஸ்’ அணி அதிகாரப்பூர்வமாக ’வெல்ஸ் சென்னை கிங்ஸ்’ எனப் பெயர் மாற்றம் பெற்றுள்ளது. சென்னை அணியில் நடிகர்கள் ஆர்யா, விஷ்ணு விஷால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. செலிபிரிட்டி கிரிக்கெட் லீக், சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரே நேரத்தில் இரட்டை விருந்து படைக்க உள்ளது.

