hardik pandya - irfan pathan
hardik pandya - irfan pathanweb

Asia Cup 2025 | ஹர்திக்கால் ஒரு ஓவரில் 6 யார்க்கரை வீசமுடியுமா..? குறையை சுட்டிக்காட்டிய இர்ஃபான்!

யுஏஇ அணிக்கு எதிராக உங்களின் இந்த காம்பினேசன் உதவலாம், ஆனால் வலுவான ஓர் அணிக்கு எதிராக விளையாடினால் இந்தியா மோசமான சூழலில் சிக்கிக்கொள்ளும் என குறையை சுட்டிக்காட்டியுள்ளார் இர்ஃபான் பதான்.
Published on

2025 ஆசிய கோப்பை தொடரானது டி20 வடிவத்தில் செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 28 வரை நடைபெறுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஹாங்ஹாங், ஓமன் முதலிய 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, ஓமன் முதலிய அணிகள் ஏ பிரிவிலும், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் முதலிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

ind vs pak
ind vs pak

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட போட்டியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14 அன்று நடைபெற இருக்கிறது.

hardik pandya - irfan pathan
மசோதா - ஆளுநர்| உச்சநீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்.. தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிபதி

அணியில் இருக்கும் குறையை சுட்டிக்காட்டிய இர்ஃபான் பதான்..

IND vs PAK
IND vs PAK

இந்திய அணி தங்களுடைய முதல் போட்டியில் யுஏஇ அணியை எதிர்கொண்டு விளையாடியது. நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 3 ஸ்பின்னர்கள் மற்றும் ஒரே ஒரு ஃபாஸ்ட் பவுலருடன் களமிறங்கியது.

யுஏஇ-க்கு எதிராக சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ், ஷிவம் துபே, பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி அனைவரும் விக்கெட் வீழ்த்தி அசத்தினர். ஆனால் ஹர்திக் பாண்டியா ஒரு ஓவரில் 10 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எடுக்காமல் இருந்தார்.

இந்நிலையில், அணியில் ஒரேயொரு வேகப்பந்துவீச்சாளர் இருப்பது இந்திய அணிக்கு முக்கியமான போட்டியில் தலைவலியாக மாறும் என்று பேசியுள்ளார்.

hardik pandya - irfan pathan
லடாக் | ”மாநில அந்தஸ்து வேண்டும்., 35 நாள் உண்ணாவிரத போராட்டம்” - சமூக ஆர்வலர் சோனம் வாங்சூக்!

இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசியிருக்கும் இர்ஃபான் பதான், “டி20 வடிவத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தபோதும், டி20 உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட போதும் அர்ஷ்தீப் சிங் அணியில் இல்லாதது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ArshdeepSingh | INDvSA
ArshdeepSingh | INDvSA

தற்போதுள்ள அணி காம்பினேஷனை கொண்டு நீங்கள் யுஏஇ-க்கு எதிராக வெற்றிபெற்றீர்கள். ஆனால் பலமான எதிரணி வரும்போது நீங்கள் மோசமான சூழலில் சிக்கிக்கொள்வீர்கள்.

ஹர்திக் பாண்டியாவை டெத் ஓவர் ஸ்பெசலிஸ்டாக எப்படி கருதுவீர்கள். அவரால் ஒரு ஓவரில் 6 யார்க்கர்களை வீசமுடியுமா? அவரால் பவுன்சர்கள் மற்றும் ஷார்ட் பால் பந்துகளைதான் வீசமுடியும். ஆனால் அர்ஷ்தீப் சிங் ஏற்கனவே டெத் ஓவர்களில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்துள்ளார்” என்று பேசியுள்ளார்.

hardik pandya - irfan pathan
தவெக | திருச்சி கிழக்கை தேர்ந்தெடுக்கிறாரா விஜய்? பின்னிருக்கும் காரணம் என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com