பாகிஸ்தான் "Fast Bowling" ஜாம்பவான்களை தூக்கி சாப்பிட்ட பும்ரா! விரைவாக 150 விக். வீழ்த்தி சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்து அசத்தியுள்ளார்.
இம்ரான் கான் - பும்ரா - சோயப் அக்தர்
இம்ரான் கான் - பும்ரா - சோயப் அக்தர்PT

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டிய இடத்திலிருந்து இந்தியா தோல்வியை தழுவியது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. சொந்த மண்ணில் தொடரை சமன்செய்யவேண்டிய கட்டாயத்தில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர் உட்பட அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, தனியொரு ஆளாக களத்தில் நிலைத்து நின்ற இளம்வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை எடுத்துவந்து அசத்தினார். 290 பந்துகளில் 19 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் என துவம்சம் செய்த யஷஸ்வி 209 ரன்கள் குவிக்க, இந்தியா முதல் இன்னிங்ஸ் முடிவில் 396 ரன்கள் குவித்து ஆல்அவுட்டானது.

பும்ரா, குல்தீப் மேஜிக்கால் 253-க்கு சுருண்ட இங்கிலாந்து!

ஒரு பெரிய ஸ்கோரை இந்திய அணி போர்டில் போட்டதை தொடர்ந்து, தங்களுடைய முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் செஸ்ஸன் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய இங்கிலாந்து அணி 113 ரன்களுக்கு 1 விக்கெட்டை மட்டுமே இழந்து நல்ல நிலைமையில் இருந்தது. முக்கியமான தருணத்தில் 76 ரன்களுடன் நிலைத்து நின்ற ஜாக் கிராவ்லியின் விக்கெட்டை அக்சர் பட்டேல் வீழ்த்த, அங்கிருந்து குல்தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினர்.

kuldeep yadav
kuldeep yadav

கடந்த போட்டியில் சதமடித்து இந்தியாவை தோல்விக்கு அழைத்துச்சென்ற ஒல்லி போப்பை ஒரு அசாத்தியமான யார்க்கரை வீசி வெளியேற்றினார் பும்ரா. உடன் களமிறங்கிய நட்சத்திர வீரர் ஜோ ரூட்டை உள்ளே வெளியே என ஆட்டம் காட்டி, அவுட்சைடு எட்ஜ் மூலம் வெளியேற்றி கலக்கிப்போட்டார் பூம்பூம் பும்ரா. அடுத்து களமிறங்கிய வீரர்களை குல்தீப் யாதவ் வெளியேற்ற, கேப்டன் பென் ஸ்டோக்ஸை ஒரு கனவுப்பந்தின் மூலம் 47 ரன்களில் போல்டாக்கி அனுப்பிவைத்தார் ஜஸ்பிரித்.

bumrah
bumrah

பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கெத்துக்காட்ட 253 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி ஆல்அவுட்டானது. 143 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 28 ரன்கள் எடுத்துள்ளது.

இம்ரான் கான் - பும்ரா - சோயப் அக்தர்
“Unbelievable”! இப்படியொரு கேட்ச்ச பார்த்திருக்கவே மாட்டீங்க! வைரலாகும் அசத்தல் கேட்ச்!

அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய 150-வது விக்கெட்டை பதிவுசெய்தார். இதன்மூலம் குறைவான போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 34 போட்டிகளில் இதனை செய்திருக்கும் ஜஸ்பிரித் பும்ரா ஒரேயொரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஆவார்.

இந்தப்பட்டியலில் 29 போட்டிகளுடன் ரவி அஸ்வின், 32 போட்டிகளுடன் ரவிந்திர ஜடேஜா போன்ற வீரர்கள் முதலிரண்டு இடத்தில் இருந்தாலும் வேகப்பந்துவீச்சாளர் பட்டியலில் ஜஸ்பிரித்தை தவிர வேறுயாரும் இல்லை.

அதிவேகமாக 150 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள்:

1) ஆர் அஷ்வின் - 29 போட்டிகள்

2) ரவீந்திர ஜடேஜா - 32 போட்டிகள்

3) எரப்பள்ளி பிரசன்னா - 34 போட்டிகள்

3) அனில் கும்ப்ளே - 34 போட்டிகள்

3) “ஜஸ்பிரித் பும்ரா” - 34 போட்டிகள்

4) ஹர்பஜன் சிங் - 35 போட்டிகள்

வேகப்பந்துவீச்சாளர்களில் இம்ரான் கான், சோயப் அக்தரை பின்னுக்கு தள்ளிய பும்ரா!

அதிவேகமாக 150 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆசிய வேகப்பந்துவீச்சாளர்கள் பட்டியலில், பாகிஸ்தானின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களான இம்ரான் கான் மற்றும் சோயப் அக்தரை பின்னுக்கு தள்ளிய பும்ரா இரண்டாவது அதிவேக ஆசிய பந்துவீச்சாளர்களாக இடம்பிடித்துள்ளார். அவருக்கு முன்னதாக வக்கார் யூனிஸ் மட்டும் 27 டெஸ்ட் போட்டிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்தப்பட்டியலில் இருக்கும் ஒரே இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மட்டுமே.

அதிவேகமாக 150 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய வேகப்பந்துவீச்சாளர்கள்:

1. வக்கார் யூனிஸ் (பாகிஸ்தான்) - 27 போட்டிகள்

2. ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 34 போட்டிகள்

3. இம்ரான் கான் (பாகிஸ்தான்) - 37 போட்டிகள்

4. சோயிப் அக்தர் (பாகிஸ்தான்) - 37 போட்டிகள்

இம்ரான் கான் - பும்ரா - சோயப் அக்தர்
AUS vs WI ODI: ”ஆஸிக்கு அடுத்த ஃபாஸ்ட் பவுலர் ரெடி”! வெஸ்ட் இண்டீஸை தனியாளாக வீழ்த்திய பார்ட்லெட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com