SENA நாடுகளில் முதல் ஆசிய பவுலராக சாதனை.. வாசிம் அக்ரம் ரெக்கார்டை உடைத்த பும்ரா!
ரோஹித் சர்மா... விராட் கோலி... ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வை அறிவித்ததால், இளம்வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்து தொடரை எதிர்கொண்டுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள லீட்ஸில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் யஷஸ்வி ஜெய்வால், கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பட்ன் ஆகியோர் சதம் விளாசி இந்தியா 471 ரன்கள் சேர்க்க உதவியுள்ளனர்.
நல்ல டோட்டலை பதிவுசெய்திருக்கும் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவதற்கான நம்பிக்கையை விதைத்துள்ளது. நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக சிறப்பாக பந்துவீசிய பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் மற்றும் ஜோ ரூட் 3 பேரையும் அவுட்டாக்கி பும்ரா, முதல் ஆசிய பந்துவீச்சாளராக புதிய சாதனையை படைத்துள்ளார்.
வாசிம் அக்ரம் சாதனையை உடைத்த பும்ரா..
இங்கிலாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, SENA நாடுகள் என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் அதிக விக்கெட்டுகள் வீத்திய முதல் ஆசிய பவுலராக மாறி சாதனை படைத்தார்.
இந்தப்பட்டியில் 146 விக்கெட்டுகளுடன் முன்னிலையில் இருந்த வாசிம் அக்ரமை பின்னுக்கு தள்ளி 147 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பும்ரா.
SENA நாடுகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆசிய பவுலர்கள்:
* ஜஸ்பிரித் பும்ரா - 147* விக்கெட்டுகள் - இந்தியா
* வாசிம் அக்ரம் - 146 விக்கெட்டுகள் - பாகிஸ்தான்
* அனில் கும்ப்ளே - 141 விக்கெட்டுகள் - இந்தியா
* இஷாந்த் சர்மா - 130 விக்கெட்டுகள் - இந்தியா
* முகமது ஷமி - 123* விக்கெட்டுகள் - இந்தியா