bumrah vs ollie pope yorker
bumrah vs ollie pope yorkerweb

’பும்ராவால் 5 டெஸ்ட் போட்டியிலும் ஆடமுடியும்..’ - முன்னாள் பயிற்சியாளர் சொல்லும் வழி என்ன?

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியில் 5 முழுமையான பவுலர்கள் இடம்பெறவேண்டும் என முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.
Published on

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின், ரோகித் சர்மா, விராட் கோலி என்ற 3 மிகப்பெரிய கிரிக்கெட் ஆளுமைகள் ஓய்வை அறிவித்திருப்பது இந்தியாவிற்கு சவாலான நேரத்தை விட்டுச்சென்றுள்ளது.

3 ஜாம்பவான்கள் இல்லாத மிகப்பெரிய வெற்றிடத்தை இந்தியா எப்படி நிரப்பப்போகிறது என்ற கேள்விகளுக்கு பதிலாக, சுப்மன் கில் தலைமையிலான டெஸ்ட் அணியை கட்டமைத்துள்ளது இந்திய தேர்வுக்குழு.

சுப்மன் கில்
சுப்மன் கில்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. இத்தொடர் புதிய கேப்டனான கில்லுக்கு சவால்கள் நிறைந்த ஒன்றாக இருக்கப்போவதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்நிலையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தை சமாளிக்க வேண்டும் என்றால் அணியில் 5 பவுலர்கள் இடம்பெறவேண்டும் என்று முன்னாள் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண் தெரிவித்துள்ளார்.

10 பவுலிங் ஆப்சனை வைத்திருக்கும் இந்தியா..

இந்திய அணியை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூர், நிதிஷ்குமார் ரெட்டி என 7 வேகப்பந்துவீச்சாளர்களும், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் என 3 சுழற்பந்துவீச்சாளர்கள் என 10 பவுலிங் ஆப்சனை கொண்டுள்ளது.

இந்த நிலையில் ஆடும் பிளேயிங் 11-ல் 5 முழுமையான பவுலர்கள் இருந்தால் தான் இங்கிலாந்தை சமாளிக்க முடியும் என்று கூறியுள்ளார் முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண்.

முதல் போட்டி நடைபெறவிருக்கும் ஹெடிங்லி மைதானத்தில் ஆடுகளம் வறண்ட பிட்சாக இருக்கும் என கூறப்படும் நிலையில், பெரும்பாலானா கிரிக்கெட் வல்லுநர்கள் 2 ஸ்பின்னர்களுடன் செல்ல வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.

இந்த சூழலில் ரெவ் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் பாரத் அருண் கூறுகையில், “இந்திய அணியில் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் நிச்சயம் இடம்பிடிப்பார்கள். இவர்களை கடந்து ஒரு வேகப்பந்துவீச்சாளர் நிச்சயம் தேவை, நான் பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப்பிற்கு முன்னதாக அர்ஷ்தீப் சிங்கை அணியில் இணைப்பேன். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அணியில் இருப்பது மிகப்பெரிய பலமாக இருக்கும்.

அதேவேளையில் ஜடேஜாவுடன், குல்தீப் என 2 ஸ்பின்னர்கள் அணியில் இடம்பெறவேண்டும், முதல் இன்னிங்ஸில் இல்லாவிட்டாலும் இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார். அவரால் ஷேன் வார்னேவை போல பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

இவர்களை கடந்து ஒரு ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அல்லது ஷர்துல் தாக்கூர் இருவரில் ஒருவர் இடம்பெறவேண்டும். அது கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் அழைப்பு, ஆனால் அணியில் 5 முழுமையான பவுலர்கள் இருந்தால் தான் இங்கிலாந்தை சமாளிக்க முடியும். வறண்ட ஆடுகளமாக இருந்தால் உங்களுக்கு பந்துவீச்சில் அதிக உழைப்பு தேவைப்படும், அதனால் அதிக பவுலர்கள் இருப்பது நல்லது” என்று பேசியுள்ளார்.

5 போட்டியிலும் பும்ரா விளையாட இதான் வழி..

பும்ரா ஃபிட்னஸ் பிரச்னையில் இருப்பதால் 3 டெஸ்ட் போட்டிகளில் தான் விளையாடுவார், அவர் எந்த 3 போட்டிகளில் விளையாடுவார் என்பது பின்னர் தான் முடிவுசெய்யப்படும் என பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார்.

இந்த சூழலில் 5 போட்டியிலும் பும்ரா விளையாட வேண்டுமென்றால், மற்ற பவுலர்களிடமிருந்து பும்ராவிற்கு அனைத்து உதவியும் தேவை. ஒருவேளை மற்றபவுலர்களும் சிறந்த பங்களிப்பை கொடுத்தால் பும்ராவால் 5 டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியும். அதற்கு ஆடுகளங்களுக்கு ஏற்றார்போல பவுலர்களை களமிறக்கவேண்டும் என பாரத் அருண் தெரிவித்துள்ளார்.

பும்ரா
பும்ரா

இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com