இந்திய அணிக்கு அடுத்த ‘தலைமை பயிற்சியாளர்’ யார்? .. தோனியின் உதவியை நாடும் பிசிசிஐ!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த கோச் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Dhoni - BCCI
Dhoni - BCCIPT

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. அதனால் ராகுல் டிராவிட்டிற்கு பிறகான புதிய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

ராகுல் டிராவிட் தொடர்ந்து செயல்பட விருப்பம் தெரிவிக்காத நிலையில், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ஜாம்பவான்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஸ்டீபன் பிளெம்மிங், ஜஸ்டின் லாங்கர், விவிஎஸ் லக்சுமன் ஆகிய மூன்றுபேரும் சிறந்த போட்டியாக இருப்பார்கள் என பேச்சுகள் அடிபடுகிறது. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 முறை ஐபிஎல் கோப்பை வென்றவரான நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங்கை நியமிக்கும் எண்ணத்தில் பிசிசிஐ இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்காக பிசிசிஐ சார்பில் ஏற்கனவே ஸ்டீபன் பிளெம்மிங்கிடம் பேசி இருப்பதாகவும், அவர் இன்னும் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டது. தற்போது சிஎஸ்கே அணிக்கு மட்டுமல்லாமல் சென்னை அணியின் சகோதர அணிகளான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் முதலிய அணிகளுக்கும், இங்கிலாந்தின் தி ஹண்ட்ரட் தொடரின் சதர்ன் பிரேவ் முதலிய பல்வேறு பிரான்சைஸ் டி20 அணிகளுக்கும் பயிற்சியாளராக இருந்துவருகிறார்.

பல பிரான்சைஸ் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துவரும் பிளெம்மிங், இதுவரை சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூட இதுகுறித்து கலந்து பேசவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் ஃபிளமிங்கை நியமனம் செய்ய மகேந்திர சிங் தோனியின் உதவியை பிசிசிஐ நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலம் ஃபிளமிங் உடன் பயணித்தவர் என்ற முறையில், தோனியை வைத்து அவரை சம்மதிக்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை ஃபிளமிங் சம்மதிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு 2027 ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகளுக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றுவார்.

Dhoni - BCCI
'Definitely Not..?' |ஓய்வு குறித்து சஸ்பென்ஸ் வைத்துச் சென்ற தோனி.. CSK நிர்வாகிகளிடம் சொன்னது என்ன?

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவி நடப்பு தொடரில் இருந்து வெளியாகியுள்ள நிலையில் தோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சிக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com