பிசிசிஐ முகநூல்
கிரிக்கெட்
கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த பிசிசிஐ அனுமதி!
கிரிக்கெட் பந்தின் ஒருபுறம் உமிழ்நீரை தடவி பளபளப்பாக்கி அதை ஸ்விங் செய்ய ஏதுவாக மாற்றும் நடைமுறை பந்துவீச்சாளர்களால் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில், உமிழ்நீரைக் கொண்டு பந்தை பளபளப்பாக்க விதிக்கப்பட்டிருந்த தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது.
கிரிக்கெட் பந்தின் ஒருபுறம் உமிழ்நீரை தடவி பளபளப்பாக்கி அதை ஸ்விங் செய்ய ஏதுவாக மாற்றும் நடைமுறை பந்துவீச்சாளர்களால் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கொரோனா காலகட்டத்தில் தொற்று பரவலை கருத்தில்கொண்டு உமிழ்நீரை தடவும் நடைமுறைக்கு ஐசிசி தடை விதித்திருந்தது.
இத்தடை ஐபிஎல் தொடரிலும் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது நிலைமை சீராகிவிட்ட நிலையில் மீண்டும் உமிழ்நீரை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என வீரர்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் உமிழ்நீர் பயன்பாட்டுக்கான தடை நீக்கப்பட்டுள்ளது.