ரவி சாஸ்திரிக்கு BCCI-ன் வாழ்நாள் சாதனையாளர் விருது! சுப்மன் கில்லுக்கு சிறந்த வீரர் விருது!

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரிக்கு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதும், யங் டேலண்ட் சுப்மன் கில்லிற்கு ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதும் வழங்கப்படு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ரவி சாஸ்திரி
ரவி சாஸ்திரிX

கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு கோவிட் தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்ட பிசிசிஐ விருதுகள், 4 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடத்தப்பட உள்ளது. ஜனவரி 23 அன்று செவ்வாய்கிழமை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள பிசிசிஐ விருதுகள் வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கான விருதும் வழங்கப்படவுள்ளன.

இந்த விழாவில் இந்திய அணியும், இந்தியாவிற்கு வந்திருக்கும் இங்கிலாந்து அணியும் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் பிசிசிஐ-ன் சிறந்த விருதான வாழ்நாள் சாதனையாளர் விருது முன்னாள் ஜாம்பவான் வீரர் ரவி சாஸ்திரிக்கும், ஆண்டின் சிறந்த ஆடவர் கிரிக்கெட்டர் விருது சுப்மன் கில்லுக்கும் வழங்கப்படவிருக்கிறது. இந்த இரண்டு விருதுகளையும் கடைசியாக 2019ம் ஆண்டில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் பெற்றிருந்தனர்.

ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் வீரர்களில் ஒருவரான ரவி சாஸ்திரி, இந்தியாவுக்காக 80 டெஸ்ட் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சர்வதேச கிரிக்கெட்டில் 15 சதங்கள் உட்பட 6938 ரன்கள் குவித்துள்ளார். பேட்டிங் மட்டுமல்லாமல் பந்துவீச்சிலும் கலக்கிய அவர், இந்தியாவுக்காக 280 விக்கெட்டுகளை தன்வசம் வைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 1983ல் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியும், 1985 சாம்பியன்ஸ் டிரோபி வெற்றியிலும் ஒரு அங்கமாக இருந்துள்ளார்.

Ravi Shastri
Ravi Shastri

இரண்டு முறை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இவர் இருந்த சமயத்தில், இந்திய அணி செனா நாடுகளில் டெஸ்ட் தொடர்களை வென்று ஆதிக்கம் செலுத்தியது. இரண்டு முறை ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே வைத்து தோற்கடித்தது. அதுமட்டுமல்லாமல் உலகத்தின் சிறந்த டெஸ்ட் அணியாக நீண்டநாள் இந்தியா நீடித்தது. இந்நிலையில் தான் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சுப்மன் கில்லுக்கு சிறந்த வீரர் விருது!

இந்தியாவின் அடுத்த தலைமுறை வீரராக பார்க்கப்படும் சுப்மன் கில், 2023ம் ஆண்டை ஒரு பிரகாசமான ஆண்டாக கொண்டிருந்தார். 2023ம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்களை மிக வேகமாக கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார். கடந்த வருடம் 5 சதங்களை பதிவுசெய்த அவர், பாபர் அசாமின் நம்பர் வீரர் பதவியை தட்டிப்பறித்தார். இந்நிலையில் தான் அவருக்கு சிறந்த வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com