பிசிசிஐ விருது: 4 ஆண்டுகளில் மாறிமாறி 4 விருதுகளை அள்ளிய இரண்டே வீராங்கனைகள்!

சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 4 ஆண்டுகளில் சாதித்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் விருதுகள் வழங்கி பிசிசிஐ கவுரவித்தது.
பிசிசிஐ, ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா
பிசிசிஐ, ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மாட்விட்டர்

பிசிசிஐ விருது வழங்கும் விழா

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் கடந்த நான்கு 2019-20, 2020-21, 2021-22, 2022-23 ஆகிய ஆண்டுகளுக்கான விருதுகள் இன்று (ஜன.23) வழங்கப்பட்டது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வில் இந்திய கிரிக்கெட் அணியின் இந்நாள், முன்னாள் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

4 வீரர்களுக்கு சிறந்த வீரருக்கான விருதுகள்

அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ஃபரூக் இன்ஜினியர் ஆகியோருக்கு ‘சி.கே.நாயுடு’ வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும், 2019-20ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது முகமது ஷமிக்கும், 2020-21ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், 2021-22ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது ஜஸ்பிரித் பும்ராவுக்கும், 2022-23ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது சுப்மன் கில்லும் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: ராமர் பிரதிஷ்டை நாளில் பேரணி: அல்லா மீது சத்தியம் செய்து ஆவேசமாக பேசிய மம்தா பானர்ஜி - நடந்தது என்ன?

4 ஆண்டுகள்... 4 விருதுகள்.. பெற்ற இரண்டே வீராங்கனைகள்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் சிறந்த வீராங்கனைக்கான, நான்கு ஆண்டுகளுக்கான விருதை இரண்டு வீராங்கனைகள் மட்டுமே போட்டிபோட்டு வாங்கியுள்ளனர். அந்த வகையில், ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 2019-20 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான சிறந்த வீராங்கனை விருதையும், தொடக்க பேட்டரான ஸ்மிருதி மந்தனா 2020-21 மற்றும் 2021-22ஆம் ஆண்டுக்கான விருதையும் பெற்று ஆச்சர்யம் அளித்தனர்.

2022-23 சீசனில் சிறந்த விக்கெட் டேக்கராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் மேற்கிந்திய சுற்றுப்பயணத்தில் அதிக ரன்கள் குவித்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு தீலீப் சர்தேசாய் விருது வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: தலையில் பாய்ந்த குண்டு: 4 நாட்கள் கழித்து தெரிந்துகொண்ட 21 வயது இளைஞர்.. பிரேசிலில் நடந்த சுவாரஸ்யம்

அறிமுக வீரர்கள் விருதுகள்

2019-20ஆம் ஆண்டுகளில் சிறந்த அறிமுக வீரருக்கான விருது மயங்க் அகர்வாலுக்கும், 2020-21ஆம் ஆண்டுக்கான விருது அக்‌ஷர் படேலுக்கும், 2021-22ஆம் ஆண்டுக்கான விருது ஷ்ரேயாஸ் ஐயருக்கும், 2022-23ஆம் ஆண்டுக்கான விருது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் வழங்கப்பட்டது.

பெண்களுக்கான சிறந்த அறிமுக வீரருக்கான விருது 2019-20ஆம் ஆண்டுக்கு பிரியா புனியாவிற்கும், 2020-21க்கு ஷபாலி வர்மாவிற்கும், 2021-22க்கு ஷபினெனி மேகனாவிற்கும், 2022-23க்கு அமோஞ்சத் கவுருக்கும் வழங்கப்பட்டது.

அதிக ரன்கள் எடுத்த பெண்களுக்கான விருது பட்டியலில் 2019-20க்கு பூனம் ராட்வுக்கும், 2020-21க்கு மிதாலி ராஜுவுக்கும், 2021-22க்கு ஹர்மன்பிரீத் கவுருக்கும், 2022-23க்கு ஜெமிமா ரோட்ரிக்ஸுவுக்கும் வழங்கப்பட்டது. அதுபோல் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த வீராங்கனைக்களுக்கான விருது பட்டியலில் 2019-20க்கு பூனம் யாதவிற்கும், 2020-21க்கு ஜுலன் கோஸுவாமிக்கும், 2021-22க்கு ராஜேஸ்வரி கெய்க்வாட்டுக்கும், 2022-23க்கு தேவிகா வைத்யாவிற்கும் வழங்கப்பட்டது.

இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுடன் சுற்றிய அசைவ உணவு சர்ச்சை... இணையத்தில் வைரலாகும் பதிவுகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com