\
litton das
litton dasicc

விக்கெட் கீப்பராக புதிய உலகசாதனை படைத்த வங்கதேச வீரர் லிட்டன் தாஸ்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக வரலாற்று சாதனை படைத்துள்ளார் வங்கதேச வீரர் லிட்டன் தாஸ்.
Published on: 
Summary

வங்கதேச வீரர் லிட்டன் தாஸ், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 8 ஆட்டமிழப்புகளை செய்து புதிய உலகசாதனையை படைத்தார். 6 கேட்ச்கள், 2 ஸ்டம்பிங்குகள் மூலம் முன்னணி விக்கெட் கீப்பர்களின் சாதனையை முறியடித்தார்.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது.

முதலில் டெஸ்ட் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

south africa vs bangladesh
south africa vs bangladeshicc

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 2 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தாலும் டோவிட் ஹ்ரிடோயின் 137 ரன்கள், லிட்டன் தாஸின் 120 ரன்கள் என்ற அடுத்தடுத்து 2 சதங்களால் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து அசத்தியது.

தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 5 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்தபிறகு 2வது இன்னிங்ஸுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டியது. மார்கஸ் அக்கர்மென்னின் 157 ரன்கள், ரியான் ரிக்கல்டனின் 102 ரன்கள் ஆட்டத்தால் 557 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்கா அணி.

157 ரன்கள் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்ற நிலையில், 2வது இன்னிங்ஸில் விளையாடிவரும் வங்கதேச அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 100 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கவிருக்கும் நிலையில் வங்கதேச அணி ஆட்டத்தை சமன்செய்யுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் வங்கதேச விக்கெட் கீப்பரான லிட்டன் தாஸ், ஒரே டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக ஆட்டமிழப்பை செய்த முதல் விக்கெட் கீப்பராக வரலாறு படைத்துள்ளார். தென்னப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 6 கேட்ச்களையும், 2 ஸ்டம்பிங்கையும் செய்து 8 ஆட்டமிழப்புகளுடன் வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன்பு 7 முறை ஆட்டமிழப்பு செய்ததே சாதனையாக இருந்தது. அதை பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த 2 பேர் என 5 பேர் சாதனையை வைத்திருந்த நிலையில், அதனை முறியடித்துள்ளார் லிட்டன் தாஸ்.

litton das
தென்னாப்பிரிக்கா மண்ணில் சாதிக்குமா வங்கதேசம்.. இன்று கடைசி நாள் ஆட்டம்!