“வலிமையின் மறுஉருவம்” - 100வது டெஸ்ட் போட்டியை தாய்க்காக அர்ப்பணித்த இங். வீரர் ஜானி பேர்ஸ்டோவ்!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜானி பேர்ஸ்டோவ், தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பதையொட்டி, இதைத் தனது தாய்க்காக அர்ப்பணிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
jonny bairstow
jonny bairstowpt web

இங்கிலாந்து கிரிகெட் அணியின் ஸ்டார் விக்கெட் கீப்பராக இருப்பவர், ஜானி பேர்ஸ்டோவ். இவர், தனது 100வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளதை அடுத்து, ரசிகர்கள் இவரைக் களத்தில் காண ஆர்வமுடன் காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில், இப்போட்டியை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்ட தனது தாய்க்காக அர்ப்பணிப்பதாகக் கூறியிருக்கிறார்.

பேர்ஸ்டோவின் 100வது டெஸ்ட் போட்டி:

34 வயதாகும் ஜானி பேர்ஸ்டோவ், 100வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் 17வது இங்கிலாந்து வீரராக உள்ளார். இந்தியா - இங்கிலாந்தின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிதான் இவரது 100வது டெஸ்ட் போட்டியாகும். நாளை இமாச்சல பிரதேசத்தில் தர்மசாலாவில் நடக்கும் போட்டியை தனக்கு மிக முக்கியமான ஒன்றாக உணர்கிறார் பேர்ஸ்டோவ்.

இதுவரை 99 போட்டிகளில் 5974 ரன்களையும், 12 சதங்கள், 26 அரைசதங்களையும் அடித்துள்ளார். விக்கெட் கீப்பராக 242 கேட்ச்களையும், 14 ஸ்டெம்பிங்களையும் செய்துள்ளார்.,

தாய்க்கு சமர்ப்பணம்:

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஜானி பாரிஸ்டோ கலந்து கொண்டார். அப்போது தனது தாய் குறித்துப் பேசிய அவர், “நா விளையாடுகையில் எனது தந்தையை அவ்வப்போது நினைக்கிறேன். ஆனால், அதை விடத் எனது தாய் குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்க எவ்வளவு பாடுபட்டார் என்பது தன் கண்முன் வந்து செல்லும். அதுதான், என்னை நன்றாக விளையாடுவதற்கு மேலும் உந்துதல் அளித்தது” என குறிப்பிட்டுள்ளார்.

காரணம் என்ன?

பேர்ஸ்டோவின் தந்தை, டேவிட் இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ஆவார். பேர்ஸ்டோவிற்கு 8 வயதாக இருந்த போது 1998 ஆம் ஆண்டில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு, இவரது தாய் ஜேனட்தான் குடும்பத்தைப் பார்த்து வந்துள்ளார். அது மட்டுமல்ல, இவர் இரண்டு முறை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

தாய் குறித்துப் பேசிய பேர்ஸ்டோவ்:

தாயார் குறித்துப் பேசிய ஜானி பேர்ஸ்டோவ், தனது தாய், வலிமையின் மறுஉருவம் என தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தனது 2 குழந்தைகளைக் காப்பாற்ற 3 வேலைக்கு சென்றதாகவும் தான் விளையாட வேண்டும் என அனைத்து போட்டிகளுக்கும் தன்னை கூட்டிச் சென்றதாகவும் தெரிவித்தார். மறைந்த தனது தந்தை இதையெல்லாம் பார்த்துப் பெருமைப்படுவார் என்றும் பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார்.

காயத்திலிருந்து மீண்ட பேர்ஸ்டோவ்:

ஜானி பேர்ஸ்டோவ், கடினமான சூழ்நிலையிலிருந்து மட்டுமல்ல, தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கே அச்சுறுத்தலாக அமைந்த காயத்திலிருந்து மீண்டவர். 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கோல்ஃப் போட்டியின் போது இவருக்குக் கால் உடைந்து, கணுக்காலில் பெரிய அடிப்பட்டுள்ளது. இந்த காயத்திலிருந்து மீண்டதுதான் வாழ்வில் தான் சந்தித்த மிகப்பெரிய சவால் என பேர்ஸ்டோவ் தெரிவித்துள்ளார். இந்த காயத்தால் தனது கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்து என நினைத்ததாகவும் இதிலிருந்து மீள்வோம் எனத் தான் நினைக்கவே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com