babar azam
babar azamcricinfo

20வது ODI சதம் விளாசிய பாபர் அசாம்.. தொடச்சியாக 4 முறை தொடரை இழந்தது இலங்கை!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம்..
Published on
Summary

பாகிஸ்தானுக்கு எதிராக 20வது ஒருநாள் சதத்தை அடித்த பாபர் அசாம், ராவல்பிண்டியில் நடந்த 2வது போட்டியில் 102 ரன்கள் அடித்து அசத்தினார். இலங்கை அணி 288 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 4வது முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக தொடரை இழந்தது இலங்கை.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை ஆடவர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகளும் ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெறுகின்றன..

முதல் ஒருநாள் போட்டியில் 299 ரன்கள் அடித்த பாகிஸ்தான் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்தது.. இந்தசூழலில் இரண்டாவது போட்டிக்கு முன்பாக இஸ்லாமாபாத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலால் மீண்டும் நாட்டிற்கே திரும்ப இலங்கை வீரர்கள் முடிவெடுத்தனர்..

pak vs sl
pak vs sl

தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தநிலையில், பாகிஸ்தான் வாரியம் பாதுகாப்பை உறுதிசெய்ததை அடுத்து இலங்கை வாரியம் வீரர்களை இருந்து தொடரை முடித்துவிட்டு வருமாறு அறிவுறுத்தியது..

இந்நிலையில் கார்கள் புடைசூழ இலங்கை வீரர்களுக்கு ஜனாதிபதி அளவிற்கான பாதுகாப்பை வழங்கியது பாகிஸ்தான் அரசு..

20வது ஒருநாள் சதமடித்த பாபர் அசாம்..

ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்பில் 288 ரன்கள் சேர்த்தது..

289 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றிபெற்றது.. இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் அடித்த பாபர் அசாம் 20வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்..

babar azam
babar azam

இதன்மூலம் சொந்தமண்ணில் 8 ஒருநாள் சதத்தை பதிவுசெய்த பாபர் அசாம், அதிக சதங்கள் (7) அடித்த முகமது யூசுஃப் சாதனையை முறியடித்தார்..

இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த இலங்கை அணி தொடரை இழந்துள்ளது.. இதன்மூலம் தொடர்ச்சியாக 4வது ஒருநாள் தொடரை பாகிஸ்தானுக்கு எதிராக இழந்துள்ளது இலங்கை அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com