பாபர் அசாம் - ஷான் மசூத்
பாபர் அசாம் - ஷான் மசூத்web

1958-க்கு பிறகு முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப்.. பாபர் அசாம்-ஷான் மசூத் ஜோடி சாதனை!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு பாபர் அசாம் மற்றும் ஷான் மசூத் ஜோடி அசத்தியுள்ளது.
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.

முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என வென்று ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான் அணி வரலாறு படைத்தது.

pakistan
pakistanx

இந்நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது.

பாபர் அசாம் - ஷான் மசூத்
‘இதுக்கு பருத்திமூட்ட குடோன்லயே..’ - கம்பீர் தலைமையில் 50 வருடங்களில் இல்லாத 10 மோசமான சாதனைகள்!

1958-க்கு பிறகு சாதனை பார்ட்னர்ஷிப்..

கேப் டவுனில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி ரிக்கெல்டனின் இரட்டை சதம், டெம்பா பவுமா மற்றும் வெர்ரின் இருவரின் சதம் ஆகியவற்றின் உதவியால் 615 ரன்கள் குவித்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 500 ரன்களை கடந்த தென்னாப்பிரிக்கா, தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணியை முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு சுருட்டியது. இதனைத்தொடர்ந்து ஃபோல்லோவ் ஆன் மூலம் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் விளையாடிவருகிறது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம் மற்றும் கேப்டன் ஷான் மசூத் இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் விக்கெட்டுக்கே 205 ரன்களை சேர்த்தனர். பாபர் அசாம் 81 ரன்கள் எடுத்திருந்த போது சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறினார். 3வது நாள் முடிவில் 213/1 என்ற நிலையில் பாகிஸ்தான் முடித்துள்ளது. கேப்டன் ஷான் மசூத் சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில் ஃபால்லோவ் ஆன் செய்யப்பட்ட போட்டியில் தொடக்க வீரராக 205 ரன்கள் அடித்த முதல் ஜோடி என்ற சாதனையை பாபர் அசாம் மற்றும் ஷான் மசூத் இருவரும் படைத்துள்ளனர். பாகிஸ்தான் அணிக்காக 1958-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு ஃபால்லோவ் ஆன் போட்டியில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் ஜோடி மற்றும் 200 ரன்களை கடந்த முதல் ஜோடி என்ற சாதனையையும் பாபர் அசாம் மற்றும் ஷான் மசூத் படைத்துள்ளனர்.

பாபர் அசாம் - ஷான் மசூத்
“கடவுளுக்கு நன்றி.. பும்ரா இருந்திருந்தால் Nightmare-ஆக இருந்திருக்கும்” - கவாஜா, டிராவிஸ் ஹெட்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com