அக்சர் பட்டேல்
அக்சர் பட்டேல்web

தென்னாப்ரிக்கா டி20 தொடரிலிருந்து அக்சர் பட்டேல் விலகல்.. புதிய வீரர் அணியில் சேர்ப்பு!

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து அக்சர் பட்டேல் விலகியுள்ளார். மீதமிருக்கும் 2 போட்டிகளுக்கு புதிய வீரரை தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.
Published on

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடிவருகிறது.

டெஸ்ட் தொடரை 2-0 என வென்ற தென்னாப்பிரிக்கா, இந்தியாவை 25 ஆண்டுகளுக்கு பிறகு ஒயிட் வாஷ் செய்து வரலாறு படைத்தது.

இந்தியாவில் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா
இந்தியாவில் தொடரை வென்ற தென்னாப்பிரிக்கா

தொடர்ந்து கம்பேக் கொடுத்த இந்திய அணி விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் அபாரமான ஆட்டத்தால் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்று பதிலடி கொடுத்தது.

இந்தசூழலில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

ரோகித் சர்மா - விராட் கோலி
ரோகித் சர்மா - விராட் கோலி

இந்நிலையில் கடைசி 2 போட்டிகளிலிருந்து இந்தியாவின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் உடல்நலக்குறைவு காரணமாக விலகியுள்ளார்.

அக்சர் பட்டேல்
’இந்த 5 பேரா..?’ NO க்ரீன்.. NO லிவிங்ஸ்டன்.. NO ஐயர்.. CSK ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரெய்னா!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதலிரண்டு போட்டிகளில் இடம்பெற்ற அக்சர் பட்டேல் 3வது போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லை என காரணம் சொல்லப்பட்ட நிலையில், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக தொடரிலிருந்தே விலகியுள்ளார் அக்சர் பட்டேல்.

அவர் குறித்த அப்டேட்டை வழங்கியிருக்கும் பிசிசிஐ, அக்சர் பட்டேல் மோசமான உடல்நிலை காரணமாக டி20 தொடரிலிருந்து விலகுவதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அக்சருக்கு பதிலாக டி20 போட்டிகளில் அசத்திவரும் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்சர் பட்டேல்
IPL Mock Auction| 30.50 கோடிக்கு ஏலம்போன கேமரூன் க்ரீன்.. CSK vs KKR இடையே வலுவான போட்டி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com