பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிcricinfo

பாக்ஸிங் டே டெஸ்ட்| மீண்டும் மிரட்டிய இங்கிலாந்து.. 88-க்கு 6 விக்கெட்டை இழந்தது ஆஸ்திரேலியா!

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பந்துவீச்சில் மிரட்டி வருகின்றன.
Published on
Summary

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவை இரண்டாவது இன்னிங்ஸில் 88/6 என்ற நிலைமையில் விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதல் 3 போட்டியில் தோற்று தொடரை இழந்தது இங்கிலாந்து அணி. தொடரை இழந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை என்ற கரையையாவது இங்கிலாந்து நீக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவருகிறது.

ஸ்டீவ் ஸ்மித் - பென் ஸ்டோக்ஸ்
ஸ்டீவ் ஸ்மித் - பென் ஸ்டோக்ஸ்

இந்நிலையில் தான் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக மெல்போர்னில் நடந்துவருகிறது.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி
21ஆம் நூற்றாண்டில் முதல் பவுலர்.. இங்கிலாந்தின் ஜோஷ் டங் படைத்த சாதனை!

பந்துவீச்சில் மிரட்டும் அணிகள்..

பரபரப்பாக தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி வெறும் 152 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

அதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியும் வெறும் 110 ரன்களில் சுருண்டு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியாவின் மைக்கேல் நெசெர் 4 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். அதிகபட்சமாக இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 41 ரன்கள் சேர்த்தார்.

இங்கிலாந்து
இங்கிலாந்து

முதல் நாள் முடிவில் 20 விக்கெட்டுகள் பறிபோன நிலையில், 42 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியா அணி. இந்தசூழலில் இன்று இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த ஆஸ்திரேலியா 88 ரன்னுக்கு 6 விக்கெட்டை இழந்து விளையாடிவருகிறது. பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோஷ் டங் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி
110 ரன்னுக்கு சுருண்ட இங்கிலாந்து.. 116 ஆண்டுக்கு பின் மோசமான சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com