IND vs AUS: 5 விக்கெட்டுகள் அள்ளிய முகமது ஷமி! இந்திய அணிக்கு 277 ரன்கள் இலக்கு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது.
Shami - Warner
Shami - WarnerTwitter

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 2023 உலகக்கோப்பைக்கு முன் நடைபெறும் நிலையில், டி20 போட்டிகள் உலகக்கோப்பைக்கு பிறகு நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெற்றுவருகிறது. இந்திய அணியில் ரோகித் சர்மாவிற்கு பதில் ருதுராஜ் ஹெய்க்வாட் இணைக்கப்பட்டுள்ளார். மேலும் சூர்யகுமார் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்த ஷமி! நம்பிக்கை அளித்த டேவிட் வார்னர்!

டாஸ் வென்ற இந்திய கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு முகமது ஷமி தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். மென் இன் ஃபார்மில் ஜொலித்து வரும் மிட்சல் மார்ஸை ஒரு அற்புதமான அவுட்ஸ்விங் டெலிவரியில் 4 ரன்னில் வெளியேற்றினார் ஷமி. அதற்கு பிறகு பந்துவீசிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் ஆஸ்திரேலிய அணியை அழுத்தத்திலேயே வைத்திருந்தனர். ஆனால் 9வது ஓவரில் டேவிட் வார்னர் அடித்து கைக்கு வந்த கேட்ச்சை ஸ்ரேயாஸ் ஐயர் கோட்டைவிட, ஆஸ்திரேலிய அணி ரன்களை விரட்ட ஆரம்பித்தது.

டேவிட் வார்னர்
டேவிட் வார்னர்

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட டேவிட் வார்னர் தன் மீதிருந்த குறையை போக்கும் வகையில் அபாரமாக விளையாடி அரைசதம் அடித்து அசத்தினார். 2வது விக்கெட்டுக்கு 106 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்த வார்னர் மற்றும் ஸ்மித் ஜோடி ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தது. பின்னர் களத்திற்கு வந்த லபுசனே, காம்ரான் க்ரீன் என அனவரும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினாலும், அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி பெரிய இடைவெளி இல்லாமல் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியாவில் முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இளம் விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்கிலீஸ் கடைசியில் களமிறங்கி 45 ரன்கள் எடுக்க 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 276 ரன்கள் சேர்த்தது.

19 வருடங்களுக்கு பிறகு ஷமி செய்த சம்பவம்!

சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி, ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய இரண்டாவது ஃபை-பெர் கைப்பற்றி அசத்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 19 வருடங்கள் கழித்து 3வது பவுலராக மாறியுள்ளார் முகமது ஷமி. இந்த பட்டியலில் 1983-ல் கபில்தேவ் 5/43, 2004-ல் அஜித் அகர்கர் 6/42 என முதலிரண்டு இடங்களில் இருக்கின்றனர்.

முகமது ஷமி
முகமது ஷமி

மேலும் 2007ஆம் ஆண்டு ஜகீர் கானுக்கு பிறகு, 16 வருடங்களுக்கு பிறகு சொந்த மண்ணில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராகவும் முகமது ஷமி அசத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com