IND vs AUS| 26 ஓவராக குறைக்கப்பட்ட போட்டி.. ஆஸ்திரேலியாவிற்கு 131 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 130 ரன்கள் அடித்தது இந்தியா..
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடிவருகிறது..
130 ரன்கள் அடித்த இந்தியா..
பெர்த் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் 3 முறை மழை குறுக்கிட்டதால் நேரக்குறைப்பு காரணமாக 26 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வுசெய்தது.. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய ரோகித் சர்மா 8 ரன்னிலும், விராட் கோலி 0 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
கேப்டன் சுப்மன் கில்லும் 10 ரன்னுக்கு அவுட்டாக, கேஎல் ராகுல் மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் போட்டனர். அக்சர் பட்டேல் 33 ரன்னில் அவுட்டாகி வெளியேற, 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என பறக்கவிட்ட கேஎல் ராகுல் 38 ரன்கள் அடித்தார். கடைசியாக வந்த நிதிஷ்குமார் ரெட்டி 2 சிக்சர்களை பறக்கவிட இந்தியா 136 ரன்கள் அடித்தது..
DLS முறைப்படி ஆஸ்திரேலியா அணிக்கு 26 ஓவரில் 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளத்ஹு.