Eng. எதிராக முடிவு.. கோலி மீண்டும் களமிறங்க வாய்ப்பு.. மைக்கேல் கிளார்க் கணிப்பு!
மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவினால் விராட் கோலி மீண்டும் களமிறங்குவார் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர், “ஒருவேளை இங்கிலாந்து தொடரில் இந்தியா 5 - 0 என்ற கணக்கில் தோல்வி கண்டால் ரசிகர்கள் விராட் கோலி ஓய்விலிருந்து மீண்டும் வந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை விரும்புவார்கள். இங்கிலாந்தில் படுதோல்வியை சந்தித்தபின் கேப்டன், பயிற்சியாளர், ரசிகர்கள் கேட்கும்பட்சத்தில் விராட் கோலி மீண்டும் வருவார் என்று நினைக்கிறேன். இப்போதும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார். டெஸ்ட் கிரிக்கெட்டின் மீதான அவரின் ஆர்வம் பற்றி அவரது வார்த்தைகளில் கேட்க முடியும். இப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டை உச்சமாகக் கருதும் அவர், அதில் விளையாடப் போதுமானவராக இருக்கிறார். அனைவரும் ஒருநாள் ஓய்வு பெற்றுத்தான் வேண்டும். ஆனால் இந்தியா 5 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்தில் தோற்றால் அவர் மீண்டும் விளையாட வாய்ப்பிருக்கிறது. இருப்பினும் இந்தியா அந்தளவுக்கு மோசமாக தோற்கும் என்று நான் நினைக்கவில்லை. விராட், ரோகித் இல்லாமலேயே தற்போதைய இந்திய அணி நன்றாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.