\
Australia batter Nic Maddinsons terrible record Vs SA Test
Nic MaddinsonReuters

10 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக்.. 33 பந்துகள்.. 49 நிமிடங்கள்.. டக் அவுட்டில் சாதித்த ஆஸி. வீரர்!

2016-க்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த நிக் மேடிசனை, மீண்டும் தொடக்க ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுத்ததே விமர்சனத்தை ஏற்படுத்தியது.
Published on: 
Summary

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் நிக் மேடிசன் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்குத் திரும்பினார். அதிலும், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டர்பன் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 33 பந்துகளில் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தது பெரும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய அணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு நிக் மேடின்சன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதற்கிடையே இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் தொடங்கியது. இதில் தொடக்க வீரராக களமிறங்கிய நிக் மேடின்சன் டக் அவுட் முறையில் வீழ்ந்தார். போட்டியின் முதல் நாளில், களத்தில் 49 நிமிடங்கள் நிலைத்து நின்று 33 பந்துகளைச் சந்தித்தபோதிலும், தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சால் அவரால் ஒரு ரன்கூட எடுக்க முடியவில்லை.

Nic Maddinson
Nic MaddinsonReuters

இறுதியில் மார்கோ யான்சன் பந்துவீச்சில் போல்டு ஆகி வெளியேறினார். முன்னதாக, இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே வீயான் முல்டர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆக வேண்டியிருந்தது. தென்னாப்பிரிக்கா அணி 'ரிவியூ' எடுக்காததால் அவர் தப்பித்திருந்தார். மேலும் நிக் மேடிசனின் டக் அவுட்டும் ஒரு சாதனையாக மாறியுள்ளது. டெஸ்ட் வரலாற்றில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர் எதிர்கொண்ட மிக நீண்ட 'டக் அவுட்' இன்னிங்ஸ்களில் ஒன்றாக இது பதிவாகியுள்ளது. 2016-க்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்த நிக் மேடிசனை, மீண்டும் தொடக்க ஆட்டக்காரராகத் தேர்ந்தெடுத்ததே விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின் வாய்ப்பு கிடைத்தபோதிலும், களத்தில் அவரது பதற்றமும் ஆட்டமிழந்த விதமும் ஆஸ்திரேலிய அணியின் தேர்வு குறித்து விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com