\
wpl
wpltwitter

2024 மகளிர் ஐபிஎல்: டிசம்பர் 9 மும்பையில் ஏலம்!

2024-ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் மும்பையில் டிசம்பர் 9-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on

இந்தியாவில் நடைபெறும் ஆடவர் ஐபிஎல், பெரிய கிரிக்கெட் திருவிழாவாகப் பார்க்கப்படுகிறது. ஆடவருக்கான ஐ.பி.எல். தொடர் 16 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபோட்டு வருகிறது. தவிர, 17-வது ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதேபோன்று, மகளிருக்கான டி20 ஐபில் போட்டியையும் பிசிசிஐ, முதல்முறையாக இந்த ஆண்டு வெற்றிகரமாக நடத்தியது.

இதில் மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத், லக்னோ ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் விளையாடின. இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் மும்பை அணி கோப்பையை வென்றது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் போட்டிக்கான ஏலம் மும்பையில் டிசம்பர் 9ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: இந்திய அணி தோல்வி: இந்திரா காந்தியின் பிறந்தநாளே காரணம்.. புதிய விளக்கமளித்த அசாம் முதல்வர்!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com