ஆசிய விளையாட்டு டி20| முதல் போட்டியில் ஜப்பானை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!
ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட்டில் 10 அணிகள் பங்கேற்க, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. மீதமுள்ள அணிகள் இடையே தகுதிப்போட்டிகள் நடக்கின்றன.
2026 ஆசிய விளையாட்டின் ஒரு அங்கமாக டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட கிரிக்கெட் நாடுகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஓமன், ஹாங்காங், மலேசியா மற்றும் நேபாள் உள்ளிட்ட 10 அணிகள் மொத்தமாக பங்கேற்றுள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட 4 அணிகள் நேரடியாக காலிறுதிப்போட்டியில் விளையாடும் நிலையில், காலிறுதிப்போட்டிக்கான மோதலில் மற்ற 6 அணிகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ஆசிய விளையாட்டின் முதல் டி20 போட்டியாக இன்று ஆப்கானிஸ்தான் - ஜப்பான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 129 ரன்கள் அடித்த நிலையில், 130 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய ஜப்பான் அணி 81 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்அவுட்டானது.
மலேசியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான 2வது போட்டி தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற ஹாங்காங் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது.

