Asia Cup 2025| சாதிக்குமா ஹாங்காங்.. சுருக்கமான அலசல்
2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கோப்பை போட்டியில், மூன்றாவது இடத்தை பிடித்ததன் மூலம் ஆசிய கோப்பையில் விளையாட தகுதி பெற்றது ஹாங்காங்.
இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் இடம்பெற்றுள்ள பி பிரிவில் உள்ளது ஹாங்காங். சவாலான தொடராக இருந்தாலும் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஹாங்காங் அணிக்கு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. நிசாகத் கானிடம் இருந்த கேப்டன் பொறுப்பு, மற்றொரு ஆல்ரவுண்டரான யாசிம் முர்தசாகையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாபர்ஹயாத் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முர்தசாவின் புதிய தலைமை, அனுபவமிக்க பாபர் ஹயாத்தின் ஆதரவுடன், அணிக்கு ஒருபுதிய உத்வேகத்தையும் உறுதியையும் அளிக்கிறது.
ஹாங்காங் அணியின் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். அபுதாபியில் இரண்டு போட்டிகளும், துபாயில் ஒரு போட்டியும் நடைபெறும். முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளும் ஹாங்காங் அணி, வரும் 11 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அதனைத் தொடர்ந்து வரும் 15 -ஆம் தேதி இலங்கை அணியுடன் மோதவுள்ளது.
ஹாங்காங் அணி இதற்குமுன் 2004, 2008, 2018, 2022- என 4ஆண்டுகள் ஆசிய கோப்பையில் பங்கேற்றுள்ளது. முந்தைய தொடர்கள் அனைத்திலும் முதல் சுற்றுடன் மூட்டையை கட்டியது. ஆனால் இப்போது அப்படியல்ல. தொடர், T20 வடிவத்தில் நடைபெறுவதால், ஹாங்காங் அணி முத்திரை பதிக்க ஒரு புதியவாய்ப்பு கிடைத்துள்ளது.
அணி வீரர்கள் : யாசிம் முர்தசா (கேப்டன்), பாபர்ஹயாத் (துணைக் கேப்டன்), நிசாகத்கான், ஜீஷான் அலிநஸ்ருல்லா ரானா, மார்ட்டின் கோட்ஸி,அன்ஷுமான் ராத், கல்ஹான் சல்லு,ஆயுஷ் சுக்லாமுகமது ஐசாஸ் கான், அதீக் உல்ரஹ்மான், கிஞ்சித் ஷா, அடில் மெஹமூத்,ஹாரூன் அர்ஷத்அலி ஹசன், ஷாஹித் வாசிஃப், கசன்பர்முகமது, முகமது வாகீத், ஈஷான் கான்