\
dhoni csk
dhoni cskweb

”தோனி தயாராக இருக்கிறார்.. SRH போட்டியில் களமிறங்குவார்” - முன்னாள் வீரர்

சிஎஸ்கேவில் இருக்கும் ஃபினிசர் பிரச்னையை சரிசெய்ய தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாக முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
Published on: 
Summary

2026 ஐபிஎல் பிளேஆஃப் வாய்ப்பு குறைந்துள்ள நிலையில், அணித்தேர்வு, பவுலிங் ரொட்டேசன், ஃபினிஷர் மற்றும் டெத் பவுலிங் குறைபாடுகள் சிஎஸ்கேவை சிக்கலில் ஆழ்த்தியுள்ளன. இதை சமாளிக்க, அடுத்த ஆட்டத்தில் ஃபினிஷராக தோனி களமிறங்கலாம் என முன்னாள் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.

2026 ஐபிஎல் தொடரின் பிளேஆஃப் செல்வதற்கான வாய்ப்பு சிஎஸ்கே அணிக்கு கடினமானதாக உள்ளது. நேற்று நடந்த லக்னோ அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு சிஎஸ்கே அணியின் வாய்ப்பு 47%-லிருந்து 28%ஆக குறைந்துள்ளது.

சிஎஸ்கே, 2026
சிஎஸ்கே, 2026csk

சிஎஸ்கே அணியில் அணித்தேர்வு, பவுலிங் ரொட்டேசன், ஃபினிசர் இல்லாதது, டெத் பவுலிங் இல்லாதது என பலகுறைகள் இருந்துவருகிறது. இந்தசூழலில் நேற்றைய போட்டியில் பிரசாந்த் வீர் இறங்கிய இடத்தில் தோனி விளையாடியிருக்கலாம் என்ற கருத்தை முன்னாள் சிஎஸ்கே வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

தோனி
தோனிபிசிசிஐ

யூடியூப் சேனலில் பேசிய அவர், “நான் கேள்விப்பட்டவரை தோனி கடந்த 3 போட்டிகளாகவே விளையாட தயாராகவே இருக்கிறார். ஃபினிசர் குறையை போக்க SRH-க்கு எதிரான அடுத்த போட்டியில் நிச்சயம் களமிறங்க வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார். தோனி அணிக்குள் திரும்புவது ஒட்டுமொத்த அணிக்குமே பலத்தை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com