திடீரென சன்னி லியோன் படத்தை பதிவிட்ட அஸ்வின்.. ஏன் தெரியுமா? கண்டுபிடித்த ரசிகர்கள்!
முன்னாள் இந்திய வீரர் அஸ்வின், 2026 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக சன்னி லியோன் படத்தை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள், இது தமிழக வீரரை குறிக்கிறது என கண்டுபிடித்துள்ளனர். 22 வயது இளம்வீரர், சையத் முஷ்டாக் அலியில் சிறப்பாக விளையாடி வருகிறார். 2026 ஐபிஎல் ஏலத்தில் கவனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 ஐபிஎல் ஏலத்திற்கு இன்னும் 5 நாட்களே இருந்துவரும் சூழலில், முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து தன்னுடைய எக்ஸ்தள பக்கத்தில் கவனம் பெறக்கூடிய வீரர்கள் பெயரை ஹிண்ட் மூலம் பதிவிட்டுவருகிறார்.
முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பதிரானா வெளியேற்றப்படவிருப்பதை மறைமுகமாக பதிவிட்ட அஸ்வின், 10 விரல்களையும், நடிகர் ராணா டகுபதி புகைப்படத்தையும் பதிவிட்டார். அப்போதே ரசிகர்கள் பதிரானா வெளியேற்றப்படவிருப்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அக்யூப் நபி என்ற வேகப்பந்துவீச்சாளருக்கும் ஹிண்ட் மூலம் பதிவிட்டிருந்தார்.
இந்தசூழலில் தற்போது அவர் பதிவிட்டிருக்கும் பதிவில் நடிகை சன்னி லியோன் படத்தையும், தெருவின் படத்தையும் பதிவிட்டுள்ளார். அந்த படத்திற்கான ஹிண்ட்டை கண்டுபிடித்த ரசிகர்கள் தமிழக வீரர் சன்னி சந்துவை அஸ்வின் குறிப்பிட்டுள்ளதாக கமண்ட் செய்துவருகின்றனர்.
யார் இந்த சன்னி சந்து?
தமிழகத்தை சேர்ந்த வலது கை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சன்னி சந்து சையத் முஷ்டாக் அலியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசியாக விளையாடிய சௌராஷ்டிரா அணிக்கு எதிரான போட்டியில் 4 ஓவரில் 40 ரன்களை சேஸ்செய்த சன்னி சந்து, 9 பந்தில் 333 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் உட்பட 30 ரன்கள் விளாசினார்.
22 வயதான இளம்வீரர் சன்னி சந்து 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் 30 லட்சத்திற்கு பதிவுசெய்துள்ளார். அவருடன் சேர்ந்து சையத் முஷ்டாக் அலியில் கவனம் ஈர்த்த பல இளம்வீரர்கள் ஏலத்தில் பதிவுசெய்துள்ளனர். பெரிய வீரர்கள் யாரும் இல்லாத சூழலில் பல இளம் வீரர்களுக்கு 2026 ஐபிஎல் ஏலம் நன்மையை சேர்க்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

