\
Ashok Sharma replaces Yudhvir Singh in India A squad
ashok sharmabcci

இனி, கவலையில்லை.. 150 கி.மீ. வேகம்.. இந்திய ஏ அணியில் இடம்பிடித்த புது பவுலர்!

முத்தரப்பு தொடரில், வேகப்பந்து வீச்சாளர் யுத்வீர் சிங் காயமடைந்த நிலையில், அவருக்குப் பதிலாக அசோக் சர்மா இந்திய ஏ அணியில் இடம்பிடித்துள்ளார்.
Published on

இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், ஒவ்வோர் அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இத்தொடரில், வேகப்பந்து வீச்சாளர் யுத்வீர் சிங் இந்திய ஏ அணியில் இடம்பிடித்திருந்தார்.

ashok sharma
ashok sharma

ஆனால், அவருக்கு காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, இளம் வேகப்பந்து வீச்சாளரான அசோக் சர்மா அணியில் இடம்பிடித்துள்ளார். இவர், 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஆற்றல் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ashok Sharma replaces Yudhvir Singh in India A squad
இந்தியா செய்த மிகப்பெரிய தவறு.. பேட் பிடிக்காமல் 10 ரன்கள்.. அதிர்ஷ்டத்தால் இலங்கை வெற்றி!

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அறிமுகமான அசோக் சர்மா, மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி அனைவரையும் கவர்ந்தார். இத்தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதற்கு முன்பு 2022இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 55 லட்சம் ரூபாய்க்கும், பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 30 லட்சம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர், இந்த ஆண்டு மினி ஏலத்தில் 90 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார். முன்னதாக, ராஜஸ்தான் அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடிவந்த அவர், தற்போது குஜராத் அணிக்கு மாறியுள்ளார்.

முத்தரப்பு தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட இந்திய ஏ அணி: திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), பிரியான்ஷ் ஆர்யா, வைபவ் சூரியவன்ஷி, ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, சூர்யன்ஷ் ஷெட்ஜ், பிரப்சிம்ரன் சிங் (WK), குமார் குஷாக்ரா (WK), அர்ஷ் கான், விப்ராஜ் நிகம், விப்ராஜ் நிகம், அனுகுல் ராய், அசோக் சர்மா.

Ashok Sharma replaces Yudhvir Singh in India A squad
”நீ வீட்டுக்குப் போ..” வம்பிழுத்த இலங்கை வீரர்.. எல்லை மீறிய வைபவ் சூர்யவன்ஷி.. ஐசிசி தண்டனை?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com