ரோகித் சர்மாவை விலைக்கு வாங்க முயன்ற மற்றொரு ஐபிஎல் அணி! வெளியான புதிய தகவல்! சிஎஸ்கே?

மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்ததையடுத்து வேறொரு அணி ரோகித் சர்மாவை விலைக்கு வாங்க மும்பை இந்தியன்ஸ் அணியிடம் டீல் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
rohit sharma
rohit sharmaX

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரூ15 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி. இதற்கு முன்பு வரை வீரர்களை விலைக்கு வாங்கியே பார்த்து பழக்கப்பட்ட ஐபிஎல் வர்த்தகத்தில், ஒரு அணியின் கேப்டனையே மும்பை இந்தியன்ஸ் விலைக்கு வாங்கியது கவனம் ஈர்த்தது. எப்படியும் ரோகித் சர்மாவிற்கு பிறகுதான் ஹர்திக்கை கேப்டனாக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்த நிலையில், அனைவரது எண்ணத்தையும் பொய்யாக்கி வேகமாகவே ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன் பொறுப்பை தூக்கிக் கொடுத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாத ரோகித் சர்மாவின் ரசிகர்கள், “ 5 முறை கோப்பை வென்ற ஒரு வெற்றிக் கேப்டனை எப்படி இதுபோன்று பதவியிலிருந்து நீக்க முடியும்? ஒரு லெஜண்டரி ஐபிஎல் கேப்டன் எப்படி ஹர்திக் பாண்டியாவிற்கு கீழ் வீரராக செயல்பட முடியும்? இது ரோகித் சர்மாவிற்கு நீங்கள் இழைத்த பெரிய அவமானம்!” என தொடர்ந்து விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். வீரர்கள் ஒருபுறம் என்றால் ஜஸ்பிரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ், தவால் குல்கர்னி போன்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்களும் மும்பை இந்தியன்ஸின் முடிவுக்கு எதிராக பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில்தான் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து ரோகித் சர்மாவை விலைக்கு வாங்க ஒரு ஐபிஎல் அணி முயன்றதாகவும், ஒரு மும்பையை சேர்ந்த வீரர் விரைவில் மஞ்சள் நிற அணிக்கு செல்லப்போவதாகவும் தகவல் கசிந்தது. அந்த தகவல் சமூகவலைதளத்தில் பரவிக்கொண்டிருந்தபோது, ரோகித் சர்மாவின் மனைவி மஞ்சள் நிற ஹார்ட்டை கமெண்ட் செய்ததில் இந்த விவகாரம் வேகமாக பரவியது.

மஞ்சள் நிற ஹார்ட்டை கமெண்ட் செய்த ரோகித்தின் மனைவி!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நடவடிக்கையை எதிர்த்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் ரோகித்தின் ரசிகர்கள், ”#ShameonMI, #SackedRohit, #Bumrah, #Pandya, #RIPMumbaiIndians” முதலிய ஹாஸ்டாக்குகளை எக்ஸ் தளத்தில் வைரலாக்கி வருகின்றனர். தொடர்ந்து 5 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை சோஷியல் மீடியாவில் UNFollow செய்துள்ளனர். இன்னும் சில ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சியை எதிர்த்து எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சூழலில்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரோகித் சர்மாவை கௌரவிக்கும் வகையில் பகிர்ந்த வீடியோவில், ரோகித் சர்மாவின் மனைவி மஞ்சள் நிற ஹார்ட்டை பதிவிட்டார். இதை பெரிதும் எதிர்பார்க்காத சென்னை ரசிகர்கள் “ரோகித்தை மும்பையிலிருந்து விலகி ஏலத்திற்கு வரச் சொல்லுங்கள் என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கதவுகள் எப்போதும் ரோகித்திற்கு திறந்துள்ளன என்றும்” பதிவிட்டு ரோகித் மீதான பாசத்தை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் வைரலான நிலையில், ரோகித் சர்மா சென்னை அணிக்கு தான் வரப்போகிறார் என்ற தகவல் வேகமாக பரவியது. ஆனால் எந்த அணி ரோகித் சர்மாவை விலைக்கு வாங்க முயன்றது என்ற தகவல் இப்போது கசிந்துள்ளது.

ரோகித்தை விலைக்கு வாங்க முயன்ற ஐபிஎல் அணி?

ரோகித்தை விலைக்கு வாங்க முயன்ற இந்த சம்பவம், மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை விலைக்கு வாங்க குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது நடந்ததாக கூறப்படுகிறது. ரோகித் சர்மாவுடன் சேர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ரிக்கி பாண்டிங்தான் ரோகித்தை விலைக்கு வாங்க மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Ponting - Rohit
Ponting - Rohit

அதாவது ”டெல்லி கேபிட்டல்ஸ் அணி MI ஹர்திக் பாண்டியாவிற்கு பேச்சுவார்த்தை நடத்திய அதேநேரத்தில் ரோகித் சர்மாவிற்காக மும்பை இந்தியன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆனால் அதை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மறுத்துவிட்டதாகவும்” கூறப்படுகிறது.

இதுகுறித்து ஸ்போர்ட்ஸ் டுடே வெளியிட்டிருக்கும் தகவல் படி, “ரோகித் சர்மாவை ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பைப் எதிர்ப்பார்த்த ஸ்மார்ட் ஃப்ரான்சைஸ் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டனை கேட்ட அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த அணியின் பெயர் டெல்லி கேபிட்டல்ஸ். அவர்கள் ரோகித்தை ஒப்பந்தம் செய்ய தயாராக இருந்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com