காயத்துடன் விளையாடிய இந்திய வீரர்கள்
காயத்துடன் விளையாடிய இந்திய வீரர்கள்pt

’அனில் கும்ப்ளே முதல் ரிஷப் பண்ட் வரை..’ காயங்களுடன் விளையாடிய இந்திய வீரர்கள்!

அனில் கும்ப்ளே முதல் ரிஷப் பண்ட் வரை பல இந்திய வீரர்கள் காயங்களுடன் இந்திய அணிக்காக அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அப்படியான சம்பவங்களை இங்கே பார்க்கலாம்..

1. தாடை உடைந்த அனில் கும்ப்ளே

2002-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், பேட்டிங் செய்யும் போது மெர்வின் தில்லன் வீசிய பவுன்சர் பந்து அனில் கும்ப்ளேவின் தாடையை தாக்கி முறிவை ஏற்பட்டது.

அனில் கும்ப்ளே
அனில் கும்ப்ளே

காயம் இருந்தபோதிலும், கும்ப்ளே இரண்டாவது இன்னிங்ஸில் துணிச்சலுடன் பந்து வீசத் திரும்பினார், பிரையன் லாரா விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். முகத்தில் கடுமையாக கட்டுகளுடன் 14 ஓவர்கள் வீசினார். பின்னர் பெங்களூரில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு எலும்பு முறிவு சரிசெய்யப்பட்டது.

2. கேன்சருடன் விளையாடிய யுவராஜ் சிங்

2011 ஒருநாள் உலகக்கோப்பையின் போது கேன்சருடன் போராடிய யுவராஜ் சிங், கிரிக்கெட் களத்தில் ரத்த வாந்தி எடுத்தும் இந்தியாவிற்காக விளையாடினார்.

3. முதுகு காயத்துடன் விளையாடிய தோனி

2016 பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியகோப்பை போட்டியில் தோனி முதுகு காயத்துடன் விளையாடினார். போட்டிக்கு முந்தைய நாள் ஜிம்மில் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, வெயிட் தூக்கும்போது அவருடைய ஷோல்டர் ஒருபக்கமாக இறங்கியது. அவர் வெயிட் உடனேயே கீழே விழுந்தார். மறுநாள் அவரால் விளையாடவே முடியாத நிலை இருந்தபோது, பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு கால் இல்லையென்றாலும் நான் விளையாடுவேன் என்று கூறி களமிறங்கினார் தோனி.

தோனி
தோனி

அதேபோல 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 44 டிகிரி வெப்பத்தில் விளையாடிய தோனி, அதிகப்படியான வெப்பத்தை தாங்க முடியாமல் முதுகில் ஐஸ் கட்டியை கட்டிக்கொண்டு விளையாடினார்.

4. தொடை வலியுடன் ஹனுமா விஹாரி

2021 ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி 1-1 என தொடரை சமன்செய்த நிலையில், 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றியின் பக்கம் இருந்தது.

ஹனுமா விஹாரி
ஹனுமா விஹாரி

ஆனால் தொடை வலியுடன் 50 ஓவர்கள் களத்தில் நின்ற ஹனுமா விஹாரி இந்தியாவை டிராவிற்கு அழைத்துச்சென்றார். ஹனுமா விஹாரின் அந்த அர்ப்பணிப்பு இந்தியாவை 2-1 என ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல வழிவகுத்தது.

5. உடைந்த விரலுடன் விளையாடிய ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட் காயம்
ரிஷப் பண்ட் காயம்web

2025-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட்டில் கால்விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டபோதும், களத்தில் நின்று விளையாடிய ரிஷப் பண்ட் 54 ரன்கள் அடித்து அசத்தினார்.

6. முதுகு வலியுடன் போராடிய சச்சின்

சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் 2003-ல் தன்னுடைய ஏற்பட்ட தீவிர காயத்தை 10 மாதங்கள் வரை தொடர்ந்தார். இந்த இடைப்பட்ட காலங்களில் அவரால் பின்பக்கம் திரும்பி படுக்க முடியாத சூழல் உருவானது. அவரின் கடைசி காலம்வரை சச்சினின் முதுகு காயம் துரத்தியது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக இரட்டை சதம் அடிப்பதற்கு முன்பே, நியூசிலாந்துடன் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 163 ரன்கள் அடித்திருந்த போது முதுகு வலியால் வெளியேறுவார். மிகச்சிறிய மைதானமான அதில் கூடுதலாக பேட்டிங் செய்திருந்தால் மற்றொரு இரட்டை சதம் அந்த போட்டியிலேயே வந்திருக்கும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com