ரின்கு பேட்டிங்கை பார்க்கவே இந்தியா மேட்ச் பார்க்கிறேன்.. எனக்கு அவர் நம்பிக்கை தருகிறார்! - ரஸ்ஸல்

இந்திய வீரர் ரின்கு சிங் பேட்டிங்கை பார்ப்பதற்காகவே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டியை பார்ப்பதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் தெரிவித்துள்ளார்.
rinku singh - andre russell
rinku singh - andre russellipl

கொல்கத்தா அணியில் போட்டியை முடித்துவைக்கும் கடைசிநேர பினிசர் ரோலில் ஆண்ட்ரே ரஸ்ஸலின் பார்ட்னராக இருந்து வருபவர் ரின்கு சிங்தான். இந்த இரண்டு அதிரடி வீரர்களும் எதிர்வரும் 2024 ஐபிஎல் தொடரில் இணைந்து பட்டையை கிளப்பவிருக்கின்றனர்.

ஆண்ட்ரே ரஸ்ஸலை ஒரு பினிசராக பார்த்து வளர்ந்து, தற்போது அவரை போன்றே ஒரு அதிரடி பினிசராக உருவாகியிருக்கும் ரின்கு சிங், இந்திய அணியிலும் தன்னுடைய சிறப்பான பினிசிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்போது அபுதாபியில் டி10 தொடரில் விளையாடிவரும் ஆண்ட்ரே ரஸ்ஸல், தன்னுடைய பிசியான நேரத்திலும் ரின்கு சிங் பேட்டிங்கை தவறாமல் பார்த்துவருவதாக தெரிவித்துள்ளார்.

ரின்கு பேட்டிங்கை பார்க்க தான் இந்தியா மேட்ச் பார்க்கிறேன்!

ஹிந்துஸ்தான் டைம்ஸ் உடன் ரின்கு சிங்கின் பினிசிங் திறமை குறித்து பேசியிருக்கும் ஆண்ட்ரே ரஸ்ஸல், “நான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் டி20 போட்டிகளை பார்த்து வருகிறேன். ஒருவேளை போட்டியை தவறவிட்டால் ஹைலைட்ஸ் பார்ப்பதை தவறவிடுவதில்லை. அது பெரும்பாலும் ரின்கு சிங்கின் பேட்டிங்கை பார்ப்பதற்காகத்தான்” என்று கூறியுள்ளார்.

rinku singh - andre russell
rinku singh - andre russell

மேலும், “ரின்கு சிங் தற்போது இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டு வருவதில் எனக்கு ஆச்சரியமில்லை. அவர் சில வருடங்களுக்கு முன்பு KKR-ல் இணைந்தபோது, அவருடைய பேட்டிங் திறனையும் ஹிட்டிங் அதிரடியையும் வலையில் பார்த்தோம். அவர் பெரிய ஷாட்களை க்ளீன் ஹிட்டாக அடிப்பார். தற்போது அவருக்கு பெரிய மேடையில் வாய்ப்பு கிடைத்து சிறப்பாக செயல்படுவது, கடைசிநேரத்தில் ஒரு பினிசராக இறங்கி ஆட்டங்களை முடித்து கொடுப்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய இந்த பேட்டிங் ஒவ்வொரு வீரரும் விரும்பும் தன்னம்பிக்கையை அவருக்கு தருகிறது. ரின்கு ஒரு அற்புதமான டீம் மேன், நீல நிறத்தை அணிவதிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மேலும் தொடர்ந்து முன்னேறி, ஆண்டுகள் செல்ல செல்ல தலைசிறந்த வீரராக உருமாறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று புகழ்ந்து பேசியுள்ளார்.

rinku singh - andre russell
rinku singh - andre russell

அதுமட்டுமல்லாமல் ரின்கு சிங் போன்ற வீரருடன் சேர்ந்து விளையாடுவது எப்போதுமே சிறப்பானது. அவர் என்னுடைய நம்பிக்கையை அதிகமாக்குகிறார். எதிர்வரும் ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பையில் விளையாடுவதற்கு அதிக ஆர்வத்துடன் இருக்கிறேன் என்று ஆண்ட்ரே ரஸ்ஸல் தன்னுடைய ஆட்டத்திற்கும் ரின்கு நம்பிக்கை தருவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com