\
dhoni - amit mishra
dhoni - amit mishracricbuzz

3வது லெஜெண்ட்டை களமிறக்கிய டெல்லி கேபிடல்ஸ்.. பவுலிங் கோச்சாக நியமனம்!

கங்குலி, யுவராஜ் சிங் போன்ற ஜாம்பவான்கள் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில், பந்துவீச்சு பயிற்சியாளராக மற்றொரு இந்திய ஜாம்பவான் நியமிக்கப்பட்டுள்ளார்.
Published on: 
Summary

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் கங்குலி, யுவராஜை தொடர்ந்து மிஸ்ராவும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 2027 ஐபிஎல் கோப்பையை வெல்லும் முயற்சியில், அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் திறன்களை மேம்படுத்தும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு கோப்பை கூட வெல்லாத டெல்லி கேபிடல்ஸ் அணி, 2027 ஐபிஎல் சீசனில் முதல் கோப்பையை தூக்கவேண்டுமென இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களான சௌரவ் கங்குலி மற்றும் யுவராஜ் சிங் இருவரையும் பயிற்சியாளர்களாக நியமித்துள்ளது. அந்தவகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி, அஸிஸ்டண்ட் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக யுவராஜ் சிங்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தசூழலில் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் தலைசிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவரான அமித் மிஸ்ராவை நியமித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரில் தொடங்கி, 16 சீசன்களில் 162 போட்டிகளில் விளையாடியுள்ள மிஸ்ராவுக்குப் பரந்த ஐபிஎல் அனுபவம் உண்டு. அவர் தனது பயணத்தை அப்போதைய டெல்லி டேர்டெவில்ஸ் என்ற அதே அணியில் தொடங்கி, அவர்களுடன் தனது 10 சீசன்களில் விளையாடினார். மொத்தமாக 156 சர்வதேச விக்கெட்டுகளையும், 285 டி20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கும் மிஸ்ரா, 535 முதல்தர விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான் சமிந்தா வாஸ் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

dhoni - amit mishra
குரு - சிஷ்யன் ஒரே அணியில்.. கங்குலியுடன் கைக்கோர்த்த யுவராஜ் சிங்! அலப்பற கன்ஃபார்ம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com