சாய் சுதர்சன் - அலெக் ஸ்டீவர்ட்
சாய் சுதர்சன் - அலெக் ஸ்டீவர்ட்web

’டியூக்ஸ் பந்துகளை வீட்டிற்கு எடுத்துச்சென்றார்..’ - சாய் சுதர்சனை பாராட்டிய இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகளில் பயிற்சி செய்வதற்காக வீட்டிற்கு எடுத்துச்சென்றதாக சாய் சுதர்சனை முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக் ஸ்டீவர்ட் பாராட்டி பேசியுள்ளார்.
Published on

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி ’ஜுன் 13 முதல் ஆக்ஸ்ட் 4’ வரை 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவிருக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில், சுப்மன் கில் தலைமையிலான புதிய இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவிருக்கிறது.

Indian test team
Indian test teamKunal Patil

ரோகித், கோலி போன்ற மூத்தவீரர்கள் இல்லையென்றாலும் இந்தியா வலுவான அணியாகவே இருக்கிறது என பல முன்னாள் வீரர்கள் தெரிவித்துவரும் நிலையில், இங்கிலாந்தில் வந்து விளையாடுவதற்கு சாய் சுதர்சன் செய்த செயலை பாராட்டி பேசியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக் ஸ்டீவர்ட்.

டியூக்ஸ் பந்துகளை பயிற்சிக்காக எடுத்துச்சென்றார்..

சாய் சுதர்சன் குறித்து பேசியிருக்கும் முன்னாள் இங்கிலாந்து வீரர் அலெக் ஸ்டீவர்ட், சர்ரே கிரிக்கெட் அணியின் இயக்குநராக இருந்தபோது சாய் சுதர்சனின் கமிட்மெண்ட் எப்படி இருந்தது என்பது குறித்து பாராட்டி பேசியுள்ளார்.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

சாய் சுதர்சன் குறித்து பேசியிருக்கும் அவர், “சாய் சுதர்சன் சர்ரே அணிக்காக இங்கிலாந்து கவுண்டி போட்டியில் விளையாடியபோது, எங்களிடமிருந்து சில டியூக்ஸ் பந்துகளை பயிற்சிக்காக வீட்டிற்கு எடுத்துச்சென்றார். நான் அதற்கு கட்டணம் வசூலிக்கவில்லை, ஏனென்றால் அவரிடம் ஒருநாள் இந்தியாவிற்காக இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுவோம், அதற்கு எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்ற முன்னோக்கி சிந்திக்கும் மனநிலை இருந்தது

சாய் சுதர்சன் நிச்சயம் டியூக்ஸ் பந்துகளை கொண்டு பயிற்சி பெற்றிருப்பார், நடக்கவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் எங்களுக்கு சவால்தரும் பேட்டிங்குடன் வருவார் என்று நினைக்கிறேன்” என பேசியுள்ளார்.

சாய் சுதர்சன்
சாய் சுதர்சன்

மேலும் பந்தை மெதுவாக ஆடக்கூடிய அவருடைய பேட்டிங் அணுகுமுறை இங்கிலாந்து ஆடுகளங்களில் பயனளிக்கும் என்று கூறியிருக்கும் அவர், சாய் சுதர்சனின் ஆட்டம் அப்படியே கேன் வில்லியம்சன் போல் இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com